YouTurn

'பள்ளி கட்டணம் செலுத்த உதவி எண்கள்' எனப் பரவும் போலி செய்தி!

'பள்ளி கட்டணம் செலுத்த உதவி எண்கள்' எனப் பரவும் போலி செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“பள்ளி புத்தகம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று குறிப்பிட்டு 24 மொபைல் எண்களுடன் ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

தயவு செய்து ஏழ்மையான பெற்றோர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவும்


X Link | Archive Link

விரிவான விளக்கம்

“பள்ளி புத்தகம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று குறிப்பிட்டு 24 மொபைல் எண்களுடன் ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. அதனை பலரும் வாட்சாப் உட்பட அனைத்து சமூக ஊடகப் பக்கங்களிலும் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தினைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இதே புகைப்படம் கடந்த 2019-ல் இருந்தே பல்வேறு மொழிகளில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.


X Link:

மேலும் பரவி வரும் புகைப்படத்தில் இந்த உதவி எண்கள் தனியார் அமைப்பைச் சேர்ந்ததா அல்லது அரசின் உதவி எண்களா என்பன போன்ற எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை. வெறுமனே அதில் 24 மொபைல் எண்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. 


எனவே இந்த செய்தி உண்மையானது தானா என்பதை உறுதிப்படுத்த இந்த மொபைல் எண்களை யூடர்ன் தரப்பிலிருந்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால் எந்த எண்களும் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தன. இதன் மூலம் இவை உண்மையான செய்தி அல்ல என்பதை அறிய முடிந்தது. 


பரவி வரும் செய்திகள் குறித்து மேலும் ஆய்வு செய்ததில், “Marathi India Times” ஊடகப் பக்கத்தில் இது குறித்து கடந்த 2017-ல் செய்தி வெளியிடப்பட்டிருந்தன.  



அதில், “”பள்ளிப் புத்தகங்கள் தேவைப்படும் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஏதேனும் ஒன்றைத் தொடர்பு கொண்டு, இந்த செய்தியை அனுப்பவும்” என்று குறிப்பிடப்பட்டு பரவி வரும் இந்த செய்தி போலியானது. எந்தவொரு செய்தியையும் பகிர்வதற்கு முன்பு அதைச் சரிபார்ப்பது முக்கியம். நீங்கள் அனுப்பிய செய்திக்கு எதிராக யாராவது புகார் அளித்து, அது போலியானது என்று நிரூபிக்கப்பட்டால், நீங்கள் தண்டனைக்கு உள்ளாக நேரிடும்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் பரவி வரும் செய்தி போலியானது என்பது உறுதியாகிறது. 


முடிவு: 


நம் தேடலில், “பள்ளி புத்தகம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று குறிப்பிட்டு 24 மொபைல் எண்களுடன் பரவி வரும் இந்த செய்தி போலியானது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.