YouTurn

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உள்ள தர்கா மற்றும் அப்பாவு குறித்து பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உள்ள தர்கா மற்றும் அப்பாவு குறித்து பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிஆட்சியில் அமரும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும் என அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா கூறியதாகக் கூறியும், “நாடார் சங்கத்தில் இந்து நாடார்கள் மற்றும் சனாதானிகள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுவது வேதனைக்குரியது. கிறிஸ்தவ நாடார்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை” என சபாநாயகர் அப்பாவு கூறியதாகக் கூறியும் பரவி வரும் நியூஸ்கார்டுகள் போலியானவை.

பரவிய செய்தி

பரவிய செய்தி 1: 


தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிஆட்சியில் அமரும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும் - அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா



X Link | Archive Link 


பரவிய செய்தி 2: 


“நாடார் சங்கத்தில் இந்து நாடார்கள் மற்றும் சனாதானிகள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுவது வேதனைக்குரியது. கிறிஸ்தவ நாடார்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை” - சபாநாயகர் அப்பாவு 



X Link | Archive Link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பை பரபரப்பாக வெளியிட்டு வருகின்றனர். 


இந்நிலையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும் என அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா கூறியதாகக் கூறியும், “நாடார் சங்கத்தில் இந்து நாடார்கள் மற்றும் சனாதானிகள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுவது வேதனைக்குரியது. கிறிஸ்தவ நாடார்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை” என சபாநாயகர் அப்பாவு கூறியதாகக் கூறியும் நியூஸ்கார்டுகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. 




உண்மை என்ன? 


பரவி வரும் நியூஸ் கார்டுகளை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்தோம். 


முதலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும் என அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா கூறியதாகப் பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து தமிழ் ஜனம் ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். அதன் படி, “போலியான செய்தி. தமிழ் ஜனம் சார்பில் இந்த செய்தி பதிவிடப்படவில்லை” என்று குறிப்பிட்டு மார்ச் 30 அன்றே இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தனர். 


#fakenews #nda #admk #newscard #tamiljanam pic.twitter.com/a7ysKwYQt7

— Tamil Janam (@TamilJanamNews) March 30, 2026


இதே போன்று பரவும் மற்றொரு நியூஸ் கார்டு குறித்து, ‘News 7’ ஊடகப் பக்கத்தில் தேடிப் பார்த்தோம். அதன்படி, “நாடார் சங்கத்தில் இந்து நாடார்கள் மற்றும் சனாதானிகள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுவது வேதனைக்குரியது. கிறிஸ்தவ நாடார்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை - அப்பாவு“ என்று குறிப்பிட்டு அவர்கள் பக்கத்தில் எந்த செய்தியும் வெளியிடவில்லை.



முடிவு: 


நம் தேடலில், மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு நியூஸ்கார்டுகளும் போலியானவை என்பது உறுதியாகிறது. 

சுருக்கமாக


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க