யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சன் நியூஸ் ஊடகம் இப்படியான எந்த செய்தியையும் வெளியிடவில்லை. மாறாக ஏப்ரல் 18, 2026 அன்று ”முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகதான் OG” என்று சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்ட்டை எடிட் செய்து தவறாக பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
Claim 1 : இந்துகள் விஷயத்தில் இவ்வளவு கொடூரமாக இவர்கள்…..
இவர்கள் குடும்பத்தார் மட்டும் ஒவ்வொரு கோவில்களுக்கு செல்வார்கள்…. இதை கேட்டால் வாய்க்கு வந்த பதிலை சொல்வார்கள்

Claim 2 : சூடு, சொரனையற்ற இந்துக்களே சிந்தித்து வாக்களியுங்கள்

Claim 3 : நல்லது,. என்ன ஒரு நாகரிக எண்ணம்.
பெண்களே யோசியுங்கள்...
இந்த கிறுக்கனையும் ஒரு முட்டாள் கூட்டம் தலைவன் என்று கூறிக்கொண்டு சுற்றுகிறது.

Claim 4 : தினகரன்

விரிவான விளக்கம்
திமுக இருக்கும் வரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விடமாட்டோம் என்று தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாக நியூஸ் கார்ட் ஒன்று பரவி வருகிறது.
அதே போல் மூடநம்பிக்கை கூடாரங்கள் தகர்த்து துடைத்தெறியப்படும் கடவுளே இறங்கிவந்தாலும் சரி யாராலும் காப்பாத்த முடியாது என பிரச்சாரத்தின் போது மு.க ஸ்டாலின் காட்டமாக பேசியதாகவும் நியூஸ் கார்ட் ஒன்று பரவி வருகிறது.
மேலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற பெயரில் குடும்பம் என்ற அடிப்படை இந்திய கலாச்சாரத்தை பாஜக அழிக்க துடிக்கிறது என்று ராகுல் காந்தி கூறியதாக தந்தி ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று பரவி வருகிறது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துபாயில் பெண் தொழிகளுடன் ஊர் சுற்றவும், அவர்களுக்காக பால்டையில் குடிப்பதுமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்ததாக தினகரன் ஊடகத்தின் ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
Claim 1 Explanation: திருப்பரங்குன்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்ட்!
பரவி வரும் நியூஸ் கார்டில் சன் நியூஸ் என்ற லோகோ இருந்தது. இது குறித்து சன் நியூஸ் ஊடகத்தில் கேட்ட போது, இப்படியான எந்த நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை என்பதை உறுதிச் செய்தனர். இதையடுத்து பரவி வரும் நியூஸ் கார்டில் ஏப்ரல் 18, 2026 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்து சன் நியூஸின் இணையதளப்பக்கத்தில் இது குறித்து தேடிய போது, ”முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகதான் OG” என்று சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்ட்டை எடிட் செய்து தவறாகப் பரப்புவது தெரியவந்தது.
Claim 2 Explanation: மூடநம்பிக்கை கூடாரங்கள் தகர்த்து தெறியப்படும் என்று முதல்வர் பேசியதாக பரவும் நியூஸ் கார்ட்!
பரவி வரும் இந்த நியூஸ் கார்டிலும் சன் நியூஸ் என்ற லோகோ இருந்தது. இது குறித்து சன் நியூஸ் ஊடகத்தில் கேட்ட போது, இப்படியான எந்த நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து பரவி வரும் நியூஸ் கார்டில் ஏப்ரல் 18, 2026 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்து சன் நியூஸின் இணையதளப்பக்கத்தில் இது குறித்து தேடிய போது, தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது என்று சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்ட்டை எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.
#BREAKING | “தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது!” -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்#SunNews | #CMMKStalin | #Delimitation pic.twitter.com/q4Bu17tPo9
Claim 3 Explanation: பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி பேசியதாக பரவும் நியூஸ் கார்ட்!
பரவி வரும் நியூஸ் கார்டில் தந்தி டிவி என்ற லோகோ இருந்தது. இது குறித்து தந்தி டிவி ஊடகத்திடம் தொடர்பு கொண்டப் போது, இப்படியான எந்த ஒரு நியூஸ் கார்ட்டையும் வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
Claim 4 Explanation: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பரவும் நியூஸ் கார்ட்!
பரவி வரும் நியூஸ் கார்ட் போன்று தினகரன் ஊடகத்தில் மற்றொரு நியூஸ் கார்ட் வெளியாகியுள்ளது. அதில் ”திருமண உறவை கடந்து என் மச்சான் ஆதவ் அர்ஜுனா பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார். கார்கள் கூட கிப்ட் ஆக வாங்கி தந்துள்ளார். நிறைய பெண்களுடன் அவருக்கு தொடர்பு உண்டு. குடும்பத்தை ஒழுங்காக பார்க்க துப்பு இல்லாத மனிதர் அவர். "என் மச்சானின் பெயர் ஆதல் அர்ஜுனா அல்ல.... அவரது உண்மையான பெயர் செந்தில்குமார்....அவர் சொல்வது எல்லாமே பொய். பெயரில் கூட ஊழல் செய்துள்ளார்” என்று ஆதவ் ஆர்ஜூனா குறித்தே ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.
ஆனால் உண்மையான நியூஸ் கார்டில் உள்ள ஆதவ் அர்ஜூனா புகைப்படத்திற்கு பதிலாக உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து எடிட் செய்து தவறாக பரப்புகின்றனர்.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, பரவி வரும் நியூஸ் கார்ட்கள் போலியானது என்பது உறுதியானது.