YouTurn

திமுகவிற்கு ஓட்டு போட மாட்டேன் என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

திமுகவிற்கு ஓட்டு போட மாட்டேன் என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“திமுகவிற்கு ஓட்டு போட மாட்டேன் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதங்கம்” எனக் கூறி பரவும் நியூஸ் கார்டு போலியானது. இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பரவிய செய்தி

திமுக-வுக்கு ஓட்டு போட மாட்டேன் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதங்கம்!



X Link | Archive Link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில்  சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கிய நிலையில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் “விசிகவுக்கு ஒற்றை இலக்க தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் திமுக கூட்டணிக்கு ஓட்டு போடமாட்டேன்!

என உதயநிதியின் நண்பரும், இயக்குநருமான மாரி செல்வராஜ் கூறியிருந்த நிலையில், விசிக-விற்கு எட்டு தொகுதிகளை ஒதுக்கி உள்ளது திமுக” என்று குறிப்பிட்டு இயக்குநர் மாரிசெல்வராஜ் கூறியதாகக் கூறி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் செய்தி குறித்து இயக்குநர் மாரிசெல்வராஜின் சமூக ஊடகப் பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதை அறிய முடிந்தது. 


மேலும் இது குறித்து செய்திதளங்களிலும் தேடிப்பார்த்தோம். எந்த செய்தியிலும், மாரிசெல்வராஜ் கூறியதாகக் கூறி இது போன்ற செய்திகள் வெளியிடப்படவில்லை. 


மேலும் இதனை உறுதி செய்ய, இயக்குநர் மார்செல்வராஜை யூடர்ன் தரப்பிலிருந்து தொடர்பு கொண்டுகொண்டு பேசியதில், “பரவி வரும் செய்தி போலியானது. இது குறித்து எந்த கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை” என்று நமக்கு உறுதிபடுத்தினார். 



முடிவு: 


நம் தேடலில், “திமுகவிற்கு ஓட்டு போட மாட்டேன் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதங்கம்” எனப் பரவி வரும் நியூஸ்கார்டு போலியானது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க