YouTurn

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய் என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய் என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய் என்று பரவி வரும் நியூஸ் கார்ட் போலியானது. 'நியூஸ் 18 தமிழ்நாடு' இது குறித்து எந்த நியூஸ்கார்டும் வெளியிடவில்லை.

பரவிய செய்தி

அடப்பாவி இதுக்கு கூட நேரா போக மாட்டியா

'

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செப்டம்பர் 27 அன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி  41 பேர் பலியாகினர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தை காண தவெகவின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. 

இந்நிலையில் கரூரில் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி மற்றும் நிவாரணம் வழங்க அவர்களை தவெக தலைவர் விஜய் பனையூருக்கு அழைத்துள்ளதாகவும், வார இறுதிக்குள் அவர்களை பனையூருக்கு அழைத்துவர நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் என்று நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று டெரெண்டாகி வருகிறது. 


உண்மை என்ன? 

முதலில் பரவி வரும் நியூஸ் கார்ட்டில் 06-10-2025 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்து  நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் சமூக வலைதளப்பக்கங்களில் தேடினோம். அப்போது அதே அக்டோபர் 6, 2025 அன்று ”மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் தொலைபேசி மூலம் ஆலோசனை” என்ற தலைப்பில் ஒரு நியூஸ் கார்ட் வெளியிடப்பட்டிருந்தது. 


அதில் கரூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட தவெக மாவட்டச் செயலாளர்களிடம் தொலைபேசி மூலம் பேசிய தவெக தலைவர் விஜய். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பது குறித்து கருத்துக்களை கேட்டறிந்ததாக தகவல்; பிரச்னைகள் அனைத்தும் சரியாகிவிடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டும் என்று அறிவுரை என தகவல்; விமர்சனங்கள் எதற்கும் பதிலளிக்க வேண்டாம் என்றும் விஜய் அறிவுறுத்தியதாக தகவல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்ட்டை தான் எடிட் செய்து பரப்புகின்றனர் என்பது தெளிவானது. 


ஆனால் இதை மேலும் உறுதி செய்ய வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடினோம். அப்போது அக்டோபர் 7, 2025 அன்று ”கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களை விஜய் பனையூருக்கு அழைத்ததாக நியூஸ் 18 பெயரில் Fake Card” என்று பரவி வரும் நியூஸ் கார்ட் போலியானது என்பதை அவர்களின் சமூக வலைதளப்பக்கங்களில் உறுதி செய்ததை காணமுடிந்தது. 


முடிவு: 

நம் தேடலில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய் என்று பரவி வரும் நியூஸ் கார்ட் போலியானது.  'நியூஸ் 18 தமிழ்நாடு' இது குறித்து எந்த நியூஸ்கார்டும் வெளியிடவில்லை.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க