யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“வண்டி ஓட வேண்டும் என்றால் அதற்கு டயரும் முக்கியம். டயர்களை பயன்படுத்திக்கொண்டு 2026ல் பாஜக வாகனம் தமிழ்நாட்டில் ஓடும். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தது குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்” என்று கூறி பரவும் இந்த நியூஸ் கார்டு போலியானது.
பரவிய செய்தி
வண்டி ஓடவேண்டும் என்றால் அதற்கு டயரும் முக்கியம். டயர்களை பயன்படுத்திக்கொண்டு 2026ல் பாஜக வாகனம் தமிழ்நாட்டில் ஓடும். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தது குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்
விரிவான விளக்கம்
“வண்டி ஓட வேண்டும் என்றால் அதற்கு டயரும் முக்கியம். டயர்களை பயன்படுத்திக்கொண்டு 2026ல் பாஜக வாகனம் தமிழ்நாட்டில் ஓடும். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தது குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்” என்று கூறி புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
“வண்டி ஓட வேண்டும் என்றால் அதற்கு டயரும் முக்கியம். டயர்களை பயன்படுத்திக்கொண்டு 2026ல் பாஜக வாகனம் தமிழ்நாட்டில் ஓடும்” என்று சமூக ஊடகங்களில் பரவி வருவது போல அண்ணாமலை ஏதாவது கூறியிருக்கிறாரா என்பது குறித்து அவரது சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். அது குறித்த எந்த பதிவும் இல்லை.
மேலும் இது குறித்து புதிய தலைமுறை ஏதாவது செய்தி வெளியிட்டிருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்ததில், பரவி வரும் நியூஸ் கார்டில் உள்ளவாறு எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. இறுதியாக அண்ணாமலை டெல்லிக்கு பயணம் செய்தது குறித்தே நியூஸ் கார்டு வெளியிடப்பட்டிருந்தது.
எனவே இதை உறுதிபடுத்த, நம் யூடர்ன் தரப்பிலிருந்து புதியதலைமுறையை தொடர்பு கொண்டு பேசினோம். பேசியதில், அவர்கள் "இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை, இது போலியான நியூஸ்கார்டு" என்று நமக்கு உறுதிபடுத்தினர்.

முடிவு:
நம் தேடலில், “வண்டி ஓட வேண்டும் என்றால் அதற்கு டயரும் முக்கியம். டயர்களை பயன்படுத்திக்கொண்டு 2026ல் பாஜக வாகனம் தமிழ்நாட்டில் ஓடும். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தது குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்” என்று கூறி பரவும் புதியதலைமுறையின் நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியாகிறது.