யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது; ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வேன் என்று பத்திரிகையாளர் கேள்விக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்ததாகக் கூறி மார்ச் 20, 2015 தேதியிட்ட, புதியதலைமுறையின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
அதிமுகவிலிருந்து விலகி விடுவேன்; பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது; ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வேன் - பத்திரிகையாளர் கேள்விக்கு ஜெயக்குமார் பதில்
விரிவான விளக்கம்
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது; ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வேன் என்று பத்திரிகையாளர் கேள்விக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்ததாகக் கூறி மார்ச் 20, 2025 தேதியிடப்பட்ட, புதியதலைமுறையின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்தி குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஏதாவது அறிக்கை வெளியிட்டிருக்கிறாரா என்பது குறித்து அவருடைய சமூக ஊடகப்பக்கங்களை ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து அவர் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களில் இது குறித்து ஏதாவது செய்தி வெளியிடப்பட்டிருக்கிறதா என்பது குறித்து தேடியதிலும், பரவி வரும் நியூஸ்கார்டை அவர்கள் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் இதை உறுதிபடுத்துவதற்காக, இது குறித்து புதியதலைமுறையிடம் நம் யூடர்ன் தரப்பிலிருந்து தொடர்புகொண்டு பேசினோம். அவர்கள் “இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை, இது போலியான நியூஸ்கார்டு” என்று நமக்கு உறுதிபடுத்தினர்.

முடிவு:
நம் தேடலில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது; ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வேன் என்று பத்திரிகையாளர் கேள்விக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்ததாகக் கூறி பரவி வரும் புதியதலைமுறையின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது