யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சிதம்பரத்தில் சீர்திருத்தப் பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக வெளியிடப்பட்ட புதிய தலைமுறையின் நியூஸ்கார்டை, எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
சிதம்பரத்தில் தெள்ளவாரி பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
விரிவான விளக்கம்
அரசு வழங்கும் சேவைகள் எளிமையாக கிடைத்திடும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சிதம்பரத்தில் தெள்ளவாரி பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் என்று கூறியதாகக் கூறி புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து, புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்ததில், அவர்கள் இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் ஆய்வு செய்தபோது, “சிதம்பரத்தில் சீர்திருத்தப் பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிட்டு அவர்கள் நியூஸ் கார்டு வெளியிட்டிருந்ததையே காண முடிந்தது.
சிதம்பரத்தில் சீர்திருத்தப் பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
#MKStalin | #Thirumavalavan | #DMK | #VCK pic.twitter.com/PskndkPZBd
இந்நிலையில், உண்மையான நியூஸ் கார்டை எடிட் செய்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.

முடிவு:
நம் தேடலில், சிதம்பரத்தில் சீர்திருத்தப் பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக வெளியிடப்பட்ட புதிய தலைமுறையின் நியூஸ்கார்டை, எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.