யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வக்ஃபு திருத்தச் சட்டப்படி வாரியத்துக்கு புதிய உறுப்பினர் நியமனம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வக்ஃபு சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறி தினமலரின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றத்தின் தலையீடு கூடாது. அப்படி தலையிட்டால் நீதிபரிபாலன சமன்பாடு குலைந்துவிடும் அபாயம் உண்டு. வக்ஃபு சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கேள்விக்கு ஈபிஎஸ் பதில்.
விரிவான விளக்கம்
வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளும், திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தவெக உள்ளிட்ட கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து, வக்ஃபு திருத்தச் சட்டப்படி வாரியத்துக்கு புதிய உறுப்பினர் நியமனம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வக்ஃபு சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறி தினமலரின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் நியூஸ் கார்டில், “ நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றத்தின் தலையீடு கூடாது. அப்படி தலையிட்டால் நீதிபரிபாலன சமன்பாடு குலைந்துவிடும் அபாயம் உண்டு. வக்ஃபு சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கேள்விக்கு ஈபிஎஸ் பதில்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
அதிமுகவில் தொடர்ந்து கொண்டிருக்கும் நமது இஸ்லாமிய சொந்தங்களின் பார்வைக்காக?
#WaqfAmendmentBill pic.twitter.com/aglE8UHd2u
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது போலியான நியூஸ் கார்டு என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து தினமலர் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். “சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது” என்று இபிஎஸ் கூறுவது போன்று தினமலர் ஊடகம் எந்த நியூஸ்கார்டையும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது
மேலும் இது குறித்து அதிமுக கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினரின் எக்ஸ் பக்கத்திலும் தேடிப் பார்த்தோம். அதில், “சிறுபான்மையினருக்கும், இந்திய நீதித் துறைக்கும் எதிரான ஒரு கருத்தை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் கூறியதாக தி.மு.க.வினரால் சமூக ஊடகங்களில் போலி நியூஸ் கார்டு பரப்பப்பட்டு வருகிறது. இச்செய்தி முற்றிலும் போலியானது; அவதூறானது!” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.
#FakeNewsAlert
சிறுபான்மையினருக்கும், இந்திய நீதித் துறைக்கும் எதிரான ஒரு கருத்தை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் கூறியதாக தி.மு.க.வினரால் சமூக ஊடகங்களில் போலி நியூஸ் கார்டு பரப்பப்பட்டு வருகிறது.
இச்செய்தி முற்றிலும் போலியானது; அவதூறானது! pic.twitter.com/2UDBS4xIqW
இதன் மூலம் நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றத்தின் தலையீடு கூடாது. அப்படி தலையிட்டால் நீதிபரிபாலன சமன்பாடு குலைந்துவிடும் அபாயம் உண்டு. வக்ஃபு சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கேள்விக்கு ஈபிஎஸ் பதில் என்று குறிப்பிட்டு பரவி வரும் தினமலரின் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது. .
முடிவு:
நம் தேடலில், வக்ஃபு சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எனக் கூறிப் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவாகிறது.