YouTurn

திருப்பதியில் காவி உடை அணிந்து சாமி தரிசனம் செய்த திருமாவளவன் என்று பரவும் போலியான நியூஸ் கார்ட்!

திருப்பதியில் காவி உடை அணிந்து சாமி தரிசனம் செய்த திருமாவளவன் என்று பரவும் போலியான நியூஸ் கார்ட்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தந்தி டிவியின் உண்மையான நியூஸ் கார்டில் திருமாவளவன் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த புகைப்படமே இடம்பெற்றுள்ளது. இதை எடிட் செய்து காவி உடை அணிந்தது போல் தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

முழுசாக சங்கியாக மாரி இருக்கும் சோபாவை பார் 

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவினர் மே 31 அன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் எம்.பி திருமாவளவனும் இடம்பெற்றுள்ளார். அந்தவகையில், அந்த நிலைக்குழுவினரோடு சென்று ஆய்வுகளில் பங்கேற்றதோடு, திருப்பதி கோவிலிலும் தரிசனம் செய்தார். 

இந்நிலையில்  திருமாவளவன் திருப்பதியில் காவி உடையில் சாமி தரிசனம் செய்ததாக தந்தி டிவி ஊடகத்தின் நியூஸ்கார்டு ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் நியூஸ் கார்ட் குறித்து தந்தி டிவி ஊடகத்தின் சமூகவலைதளப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். அப்போது மே 31 அன்று “திருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்” என்று தந்தி டிவி ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்தில் நியூஸ் கார்ட் வெளியாகியிருந்தது. அதில் திருமாவளவன் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த புகைப்படமே இடம்பெற்றுள்ளது. 


மேலும் பரவி வரும் நியூஸ் கார்டில் Gemini AI லோகோ இடம்பெற்றிருந்ததையும் பார்க்கமுடிந்தது. இந்நிலையில் உண்மையான நியூஸ் கார்டை எடிட் செய்து காவி உடை அணிந்தது போல் பரப்புவது உறுதியானது. 


இதை மேலும் உறுதிப்படுத்த வேறு ஊடகங்களில் வெளியான செய்தியையும் தேடிப் பார்த்தோம். அப்போது News7 Tamil ஊடகத்திலும் வெளியான செய்தியிலும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் போது திருமாவளவன் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்ததை பார்க்கமுடிந்தது. 


முடிவு: 

எனவே, தந்தி டிவியின் உண்மையான நியூஸ் கார்டில் திருமாவளவன் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த புகைப்படமே இடம்பெற்றுள்ளது. இதை எடிட் செய்து காவி உடை அணிந்தது போல் தவறாகப் பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க