YouTurn

அன்வர் ராஜாவுக்கு திமுகவில் பதவி வழங்கப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

அன்வர் ராஜாவுக்கு திமுகவில் பதவி வழங்கப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவுக்கு திமுகவில் இளந்தென்றல் இன்பநிதி பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூறி பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது.

பரவிய செய்தி

அன்வர் ராஜாவுக்கு திமுகவில் புதிய பொறுப்பு, உங்களுக்கு ஏற்ற பதவியை வழங்கி திமுக கௌரவித்து உள்ளது, வாழ்த்துக்கள் அன்வர் ராஜா 

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய நாள் முதலே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்தவர் அன்வர் ராஜா. இவர் தற்போது அதிமுகவில் இருந்து விலகி, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் அன்வர் ராஜாவுக்கு திமுகவில் இளந்தென்றல் இன்பநிதி பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன?

பரவி வரும் இந்த செய்தி குறித்து  News18 Tamilnadu ஊடகத்தின் சமூகவலைதளப்பக்கங்களில் தேடி பார்த்தோம். அப்போது இது தொடர்பான எந்த செய்தியும் அங்கு வெளியிடப்படவில்லை என்பதை பார்க்கமுடிந்தது. 


இதை மேலும் உறுதி செய்ய, News18 Tamilnadu ஊடகத்தை தொடர்புக்கொண்டு கேட்ட போது, இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று உறுதிபடுத்தினர்.


மேலும் அவர்களது எக்ஸ் பக்கத்தில், இந்த செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளனர். 


மேலும் திமுகவின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கங்களில் அன்வர் ராஜா பதிவு குறித்து ஏதும் தகவல் வெளியிடப்பட்டுள்ளதா என்று பார்த்தப்போது, அது குறித்து எந்த பதிவும் வெளியாகவில்லை என்பதை பார்க்கமுடிந்தது. 


எனவே இது போலியான நியூஸ் கார்ட் என்பது உறுதியானது. 


இதே போல் சமூகவலத்தளங்களில் பரவிய போலி நியூஸ் கார்ட் குறித்து ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளோம். 


மேலும் படிக்க :  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் போலியான நியூஸ் கார்ட்! 


சீமான் நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்துப் பரப்பப்படும் போலி News Card!


முடிவு:

நம் தேடலில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவுக்கு திமுகவில் இளந்தென்றல் இன்பநிதி பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது” என்று கூறி பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பது தெரியவந்தது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க