YouTurn

நயினார் நாகேந்திரன் விருந்தில் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படவில்லை என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

நயினார் நாகேந்திரன் விருந்தில் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படவில்லை என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நயினார் நாகேந்திரன் விருந்தில் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படவில்லை என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

பரவிய செய்தி

அவமானம்! 


 

X Link / Archived Link 

 

விரிவான விளக்கம்

நெல்லையில் தனது இல்லத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறுசுவை விருந்து வைத்துள்ளார். அதில் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படாததால் பரபரப்பு ஏற்ப்பட்டதாக புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் காரட் ஒன்று வைரலாகி வருகிறது. 


 

உண்மை என்ன? 


பரவி வரும் நியூஸ் கார்டில் 26/07/2025 என்று தேதி இருந்ததை பார்க்கமுடிந்தது. அதை வைத்து புதிய தலைமுறை ஊடகத்தில் இப்படியான நியூஸ் கார்ட் வெளியாகியுள்ளதா என்பதை தேடினோம். அப்போது அதன் எக்ஸ் பக்கத்தில் “தனது இல்லத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் விருந்து” என்ற தலைப்பில் இரண்டு நியூஸ் கார்ட் ஜூலை 26,2025 அன்று வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் பரவி வரும் நியூஸ் கார்டும் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. 


#NainarNagendran | #BJP | #Nellai | #Annamalai pic.twitter.com/s4kaIVLikz

— PttvOnlinenews (@PttvNewsX) July 26, 2025

 

ஆனால் அதில் நெல்லையில் தனது இல்லத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறுசுவை விருந்து வைத்துள்ளார். முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், - ஹெச்.ராஜா, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு விருந்து என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எடிட் செய்து தான் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படாததால் பரபரப்பு பரப்புகின்றனர். 

 

முடிவு: 


எனவே,  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த விருந்தில் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படவில்லை என்று பரவுவது போலியான செய்தியாகும். உண்மையான நியூஸ் கார்டை எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.