YouTurn

'அதிமுக திமுக கூட்டணி' பேச்சுவார்த்தை குறித்து மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

'அதிமுக திமுக கூட்டணி' பேச்சுவார்த்தை குறித்து மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அதிமுகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்டு போலியானது.

பரவிய செய்தி

அதிமுகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 



X Link | Archive Link

விரிவான விளக்கம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அக்கட்சி பெறாததால், ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நிலவியது.


பின்னர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார். தற்போது சட்டசபையில் 144 வாக்குகளைப் பெற்று தனது பெரும்பான்மையையும் நிரூபித்துள்ளார். 


இந்நிலையில், "அதிமுகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகக் கூறி ‘சன் நியூஸ்’ ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


Facebook Link:


உண்மை என்ன? 


பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து ‘சன் நியூஸ்’ ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், அதிமுகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகக் கூறி எந்த செய்திகளும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி செய்ய முடிந்தது. 


மேலும் 'சன் நியூஸ்' இது குறித்து வெளியிட்டுள்ள உண்மையான நியூஸ்கார்டில், “முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா, பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. 


#BREAKING | “தோழமைத் தலைவர்களுக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்!”
-மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #MKStalin | #DMK pic.twitter.com/b4sSafTkWf

— Sun News (@sunnewstamil) May 9, 2026


இந்நிலையில் உண்மையான நியூஸ்கார்டை எடிட் செய்து சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில், அதிமுகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க