யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
சாவியை கண்டுபிடிக்கவே தியானம்! மூன்று நாள் தியானம் முடிந்து பிரதமர் திரும்பி செல்லும் போது ஜெகன்நாதர் கருவூல சாவியுடன்தான் திரும்பி செல்வார் என்று கூறிய தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை - தினமலர்

X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
2024 மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஜூன் 01 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி தனது பிரச்சாரத்தை முடித்துவிட்டு வருகின்ற 30 ஆம் தேதி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் தியானம் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மூன்று நாள் தியானம் முடிந்து பிரதமர் திரும்பி செல்லும் போது ஜெகந்நாதர் கோவில் கருவூல சாவியுடன்தான் திரும்பி செல்வார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாகக் கூறி தினமலர் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைராலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்து பார்த்தோம். இது குறித்து அவர் எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பதை அறிய முடிந்தது.
இதே போன்று தினமலர் ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களையும் ஆய்வு செய்து பர்ர்த்தோம். பரவி வரும் நியூஸ் கார்டில் குறிப்பிட்டிருப்பது போல மே 28 அன்று தினமலர் "சாவியை கண்டுபிடிக்கவே தியானம்!" என்ற தலைப்பில் நியூஸ்கார்டு எதுவும் தினமலர் ஊடகத்தால் வெளியிடப்படவில்லை என்பது உறுதியானது.
மேலும் பரவி வரும் நியூஸ்கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், 2024 ஜனவரி 10 அன்று பரவி வரும் நியூஸ்கார்டு போன்றே "அமைச்சர்கள் 3 பேர் சிறை செல்வது உறுதி: அண்ணாமலை" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அதில், "தமிழக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்கு உள்ளது. மேலும் 3 பேர் சிறை செல்லப்போவது உறுதி: பர்கூரில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேச்சு" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே ஜனவரி 10 அன்று "அமைச்சர்கள் 3 பேர் சிறை செல்வது உறுதி: அண்ணாமலை" என்ற தலைப்பில் தினமலர் வெளியிட்டிருந்த பழைய நியூஸ்கார்டை சிலர் எடிட் செய்து "ஜெகந்நாதர் கோவில் கருவூல சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்யவுள்ளார்" என்று அண்ணாமலை கூறியதாகக் கூறி சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க: திமுக ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிஷன் பெற்றதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!
இதற்கு முன்பும் போலியாக பரவிய நியூஸ்கார்டுகள் குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
முடிவு:
நம் தேடலில், ஜெகந்நாதர் கோவில் சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் நரேந்திரமோடி கன்னியாகுமரியில் தியானம் செய்யவுள்ளதாக கூறிய அண்ணாமலை எனப் பரவும் தினமலரின் நியூஸ்கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.

— Jamal Mohamed (@JamalMo19105153) May 28, 2024
இந்த மாதிரி பைத்தியங்கள்
எங்கேயும் பார்க்க முடியாது
ஒன்லி பாலியல் ஜல்சா கட்சியில் மட்டுமே பார்க்கலாம் pic.twitter.com/qOYjdYSzEZ
— . . . (@ASHOK_7007) May 29, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்து பார்த்தோம். இது குறித்து அவர் எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பதை அறிய முடிந்தது.
இதே போன்று தினமலர் ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களையும் ஆய்வு செய்து பர்ர்த்தோம். பரவி வரும் நியூஸ் கார்டில் குறிப்பிட்டிருப்பது போல மே 28 அன்று தினமலர் "சாவியை கண்டுபிடிக்கவே தியானம்!" என்ற தலைப்பில் நியூஸ்கார்டு எதுவும் தினமலர் ஊடகத்தால் வெளியிடப்படவில்லை என்பது உறுதியானது.
மேலும் பரவி வரும் நியூஸ்கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், 2024 ஜனவரி 10 அன்று பரவி வரும் நியூஸ்கார்டு போன்றே "அமைச்சர்கள் 3 பேர் சிறை செல்வது உறுதி: அண்ணாமலை" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அதில், "தமிழக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்கு உள்ளது. மேலும் 3 பேர் சிறை செல்லப்போவது உறுதி: பர்கூரில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேச்சு" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமைச்சர்கள் 3 பேர் சிறை செல்வது உறுதி: அண்ணாமலை
#Tiruvannamalai #BJP #ministers #jail
https://t.co/y4W3uzOopr pic.twitter.com/8NSIEJLZCx
— Dinamalar (@dinamalarweb) January 10, 2024