யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நக்கீரன் பத்திரிக்கை உரிமையாளர் கோபால் அவர்களின் மனைவி குறித்து ‘Asianet நியூஸ் தமிழ்‘ ஊடகம் வெளியிட்டுள்ளதாகப் பரவும் செய்தி போலியானது. ‘Asianet நியூஸ் தமிழ்‘ இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.
பரவிய செய்தி
இத கண்டுபிடுகிறேன் அத கண்டுபிடிக்கிறேன் என்று புலனாய்வு செய்து புழுத்திவிட்டு
வீட்டில் என்ன நடக்குதுனு கண்டுபிடிக்காம விட்டுடியே மீசை @nakkheeranweb

விரிவான விளக்கம்
நக்கீரன் பத்திரிக்கை உரிமையாளர் கோபால் அவர்களின் மனைவி கார் டிரைவர் உடன் ஓட்டம் என்று Asianet நியூஸ் தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறி தவெகவினர் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
யோவ்..🤯🤣 #NakkheeranGopal@nakkheeranweb pic.twitter.com/ysuohMkE3u
உண்மை என்ன?
பரவி வரும் இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பாத்தோம். அப்போது Kishore K Swamy என்ற பேஸ்புக் பக்கத்தில், முதலாமாண்டு நினைவு தினம் என்று குறிப்பிட்டு இதே புகைப்படம் டிசம்பர் 29, 2019 அன்று பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. இதிலிருந்து இந்த செய்தி 2019ல் இருந்தே பரவி வருவது தெரியவந்தது.
இதையடுத்து இந்த செய்தி குறித்து Asianet நியூஸ் தமிழ் ஊடகத்தின் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளப்பக்கத்தில் தேடிப் பார்த்தோம். இந்த மாதிரியான எந்த செய்தியும் வெளியாகவில்லை.
அதே சூழலில், Asianet நியூஸ் தமிழ் ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்தில், பரவி வரும் இந்த செய்தி குறித்து நவம்பர் 17, 2025 அன்று பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதில் Asianet News Tamil பெயரில் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது என்றும், இந்த செய்திக்கும் Asianet News Tamil நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லை எனவும் உறுதி செய்துள்ளது.
முடிவு:
எனவே, நக்கீரன் பத்திரிக்கை உரிமையாளர் கோபால் அவர்களின் மனைவி குறித்து ‘Asianet நியூஸ் தமிழ்‘ ஊடகம் வெளியிட்டுள்ளதாகப் பரவும் செய்தி போலியானது. ‘Asianet நியூஸ் தமிழ்‘ இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.