YouTurn

"பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டம்" - புதிய ஏசி வாங்கினால் ரூ.7000 வரை தள்ளுபடி எனப் பரவும் போலி செய்தி!

"பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டம்" - புதிய ஏசி வாங்கினால் ரூ.7000 வரை தள்ளுபடி எனப் பரவும் போலி செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டத்தின் மூலம் புதிய ஏசி வாங்கினால் ரூ.7000 வரை தள்ளுபடி, இதன் மூலம் 1.5 கோடி பேர் பயன்பெற முடியும்” என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் போலியானவை.

பரவிய செய்தி

பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டத்தின் மூலம் புதிய ஏசி வாங்கினால் ரூ.7000 வரை தள்ளுபடி


News Link:

விரிவான விளக்கம்

“பிரதமர் மோடி ஏசி யோஜனா என்பது ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய ஒரு திட்டம். இது பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உயர் திறன் கொண்ட ஏசிகளை வழங்கும் நோக்கில் செயல்படுகிறது. இந்த திட்டம் மூலம், மக்கள் மாதாந்திர சேமிப்புகளை மேற்கொண்டு, புதிய ஏசி வாங்குவதில் சிறந்த தள்ளுபடி பெற முடியும்” என்று குறிப்பிட்டு செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


மேலும் அப்பதிவுகளில், மின்சார அமைச்சகம் மற்றும் பியூரோ ஆப் எர்ஜி எஃபிஷியன்சி (Bureau of Energy Efficiency) இணைந்து இத்திட்டத்தை அறிவித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதனை பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது. 


News Link:


X Link:


உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், ஒன்றிய அரசு இது குறித்து எந்த செய்தியும் அறிவிக்கவில்லை என்பதை அறிய முடிந்தது. 


ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வமான, “PIB Fact Check“ எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் செய்தி குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், “'பிரதமர் மோடி ஏசி யோஜனா 2025' என்ற புதிய திட்டத்தின் கீழ், அரசாங்கம் இலவச 5 ஸ்டார் ஏசியை வழங்கும் என்றும், 1.5 கோடி ஏசிகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் செய்தி போலியானது. ஒன்றிய அரசு இது குறித்து எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


#PIBFactCheck

❌This claim is
#FAKE

❌No such scheme providing free 5-… pic.twitter.com/6MMJZdI2tV

— PIB Fact Check (@PIBFactCheck) April 18, 2025


இதன் மூலம் பரவி வரும் செய்திகள் போலியானவை என்பது உறுதியாகிறது. 


முடிவு: 


நம் தேடலில், பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டத்தின் மூலம் புதிய ஏசி வாங்கினால் ரூ.7000 வரை தள்ளுபடி, இதன் மூலம் 1.5 கோடி பேர் பயன்பெற முடியும்” என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் போலியானவை என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க