YouTurn

இந்திய ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரப்பப்படும் செய்தி தவறானது.

இந்திய ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரப்பப்படும் செய்தி தவறானது.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ரஷ்யாவில் உள்ள தண்டவாளங்களில் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளதை, இந்தியாவில் உள்ள தண்டவாளங்கள் போல் வீடியோ வைரலாக்கப்பட்டு வருகிறது.

பரவிய செய்தி

இந்திய ரயில்வே துறையை மொத்தமா முடிச்சிட்டானுங்க. வட இந்தியாவில் தான் இந்த கேவலம்


image.png

X link

விரிவான விளக்கம்

இந்திய ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளதாக வீடியோ வைரலாகி வருகிறது. 

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது ரஷ்யாவில் உள்ள தண்டவாளங்கள் என்பதை HRONIKA.INFO என்ற செய்தி ஊடகம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி செய்தியாக வெளியிட்டுள்ளது. ரஷ்ய மொழியில் இயங்கும் இந்த இணையதளத்தை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்து தெரிந்துக்கொண்டோம். மேலும் இந்த வீடியோவை உக்ரைனிய ஆயுதப்படை அதிகாரி Anatoliy Stefan பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. 


image.png


இது குறித்து மேலும் தேடி பார்த்ததில், போலாந்து நாட்டை சேர்ந்த sadistic.pl என்ற இணையதள பக்கத்திலும் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் உள்ள கமெண்ட்டிலும் ரஷ்யா என்று தான் குறிப்பிட்டுள்ளது. 


image.png


இந்த வீடியோவில் வரும் தண்டவாளங்கள் எந்த நாட்டை சேர்ந்தது என்பது சரியாக குறிப்பிடாமல் இருந்தாலும், இது இந்தியாவில் உள்ள தண்டவாளங்கள் இல்லை என்பது உறுதியானது. 


முடிவு: 

இந்திய ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரப்பப்படும் செய்தி தவறானது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.