YouTurn

குப்பைத் தொட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படம் ஒட்டப்பட்டதாகப் பரவும் போலியான புகைப்படம்!

குப்பைத் தொட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படம் ஒட்டப்பட்டதாகப் பரவும் போலியான புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

குப்பைத் தொட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் என்று கூறி பரவி வரும் புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப்பார்த்ததில், இது உண்மையான புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது.

பரவிய செய்தி

ரொம்ப ஓவரா போறீங்க டா? அது சரி எனக்கு ஒரு டவுட்டு.. இது மக்கும் குப்பையா?  மக்காத குப்பையா?


X Link | Archive Link

விரிவான விளக்கம்

குப்பைத்தொட்டி ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படம் ஒட்டப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

Content not available.


Content not available.


உண்மை என்ன? 


குப்பைத்தொட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படம் என்று கூறி பரவி வரும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப்பார்த்ததில், இது உண்மையான புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


திருவான்மியூரை சேர்ந்த திமுக ஆதரவாளரான விஎம்டி ராஜாராமன், லண்டன் சென்று வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கேலி செய்யும் விதமாக அவரது படத்தை குப்பைத்தொட்டி, கழிவறை ஆகிய இடங்களில் ஒட்டி, அதுகுறித்த படங்களை மார்ச் 22 அன்று, அவரது சமூக ஊடகப் பக்கங்களிலும் பகிர்ந்திருந்தார். 

 


Threads Link:


இந்நிலையில் சிலர், அவர் பகிர்ந்திருந்த புகைப்படத்தில் உள்ள அண்ணாமலையின் படத்தை நீக்கிவிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் இருப்பது போல எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர். இதனை கீழே உள்ள புகைப்படத்தில் தெளிவாகக் காணலாம்.


இதன் மூலம் பரவி வரும் புகைப்படம் உண்மையானது அல்ல, போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 


முடிவு: 


நம் தேடலில், குப்பைத்தொட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படம் என்று கூறி பரவி வரும் புகைப்படம் போலியானது என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.