YouTurn

திமுக தேர்தல் வாக்குறுதி என்று பரப்பப்படும் போலியான படம்!

திமுக தேர்தல் வாக்குறுதி என்று பரப்பப்படும் போலியான படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வரிசை எண் 295 இல் 'வக்பு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும்' என்றும், வரிசை எண் 419 இல் 'இந்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கிரையம் செய்து தரப்படும்' என்றும் வாக்குறுதி அளித்துள்ளதாகப் பரப்பப்படும் படம் போலியானது. திமுக வெளியிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான தேர்தல் அறிக்கையில், அப்படி எந்த வாக்குறுதிகளையும் குறிப்பிடவில்லை.

பரவிய செய்தி

வரிசை எண் -419 ஐப் பாருங்க.. இது உண்மையென்றால்.. திமுக என்னும் விஷக் கிருமியை ஜெயிக்க வைத்தால் இவனுங்க கடந்த ஆட்சியில் இடித்த பல கோவில்கள்  போல்.. 

அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கோவில் நிலத்தை குத்தகைகக்கு எடுத்தவங்களுக்கே நிலத்தை கொடுப்பானுங்களாம்.

என்ன ஒரு தெனாவெட்டு..

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வரிசை எண் 295 இல் 'வக்பு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும்' என்றும், வரிசை எண் 419 இல்  'இந்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கிரையம் செய்து தரப்படும்' என்றும் வாக்குறுதி அளித்துள்ளதாகப்  புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.


உண்மை என்ன? 

முதலில் திமுக வெளியிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான தேர்தல் அறிக்கையில் இது போன்ற ஏதேனும் வாக்குறுதியில் இருக்க என்பதை தேடிப் பார்த்தோம். அதில் வரிசை எண் 295ம் வரிசை எண் 419 என்று எந்த எண்ணிக்கையும் இல்லை. இதையடுத்து வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதா என்பதை பார்த்தோம், அப்போது அப்படி எந்த வாக்குறுதிகளையும் குறிப்பிடவில்லை. 


மாறாக திருக்கோவில் திருப்பணிகள் தொடர்பாக திமுக அளித்த வாக்குறுதிகளை பார்த்தோம். அதில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோயில்களுக்குக் குடமுழுக்குச் செய்யப்படும். திருக்கோவில்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 10 கோடி, ரூபாய் 25 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். தற்போது 770 திருக்கோவில்களில் நடைபெற்று வரும் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம், மேலும் 50 திருக்கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும் போன்ற வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளது.

image.png


முடிவு: 

எனவே, திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வரிசை எண் 295 இல் 'வக்பு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும்' என்றும், வரிசை எண் 419 இல்  'இந்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கிரையம் செய்து தரப்படும்' என்றும் வாக்குறுதி அளித்துள்ளதாகப்  பரப்பப்படும் படம் போலியானது. திமுக வெளியிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான தேர்தல் அறிக்கையில், அப்படி எந்த வாக்குறுதிகளையும் குறிப்பிடவில்லை. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க