YouTurn

தவெகவின் வாக்கு சதவீதம் என்று பரப்பப்படும் போலியாக உருவாக்கப்பட்ட வரைபடம்!

தவெகவின் வாக்கு சதவீதம் என்று பரப்பப்படும் போலியாக உருவாக்கப்பட்ட வரைபடம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றிய வரைபடத்தை Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட வரைபடம் இது.

பரவிய செய்தி

ஒவ்வொரு நாளும் தவெக கட்சியின் வாக்கு வங்கி இரண்டு மடங்கு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தற்போது, தமிழ்நாட்டு மக்கள் விஜயை, தவெக கட்சியை தான் விரும்புகிறார்கள். சந்தேகமே இல்லை! 2026ல் தளபதி விஜய் தான் தமிழ்நாட்டின் முதல்வர். 



Facebook Link / Archive Link 

விரிவான விளக்கம்

வருகின்றன 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள், வாக்குச்சாவடிக் குழு சந்திப்புகள், பொதுக்குழு, செயற்குழு, பிரச்சாரப் பயணம் என அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். தவெக கட்சியும் கடந்த நவம்பர் 5ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தை மாமல்லபுரத்தில் நடத்தியது. 


இந்நிலையில், வாக்கு சதவீதம், தொகுதிகள் ஆகியவை பற்றிய விளக்க வரைபடம் (Graph) ஒன்றை பதிவிட்டு, இது ’South First’ செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி உருவாக்கப்பட்ட வரைபடம் என்றும், வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக 37.7% வாக்குகள் பெற்று 133 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தவெக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த விளக்க வரைபடத்தைக் கொண்டு ‘Reverse Image Search’ முறையில் தேடியதில், ’South First’ இணைய செய்தித்தளத்தில் கடந்த 2025 ஜனவரி மாதம் வெளியாகியிருந்த கட்டுரை ஒன்றில் இதனைக் காணமுடிந்தது.


image.png


அதில், 2021ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றிய விளக்க வரைபடத்தை காணமுடிந்தது. இதில்  2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக 37.7% வாக்குகள் பெற்று 133 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களில் தவெக போட்டியிடவே இல்லை என்பதால் அதன் பெயர் கூட இதில் குறிப்பிடப்படவில்லை. 



இதிலிருந்து, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றிய இந்த வரைபடத்தில் திமுகவிற்கு பதிலாக தவெக என்று Edit செய்தும், அதிலுள்ள ’2021’ என்ற ஆண்டை ’2026’ என்று  Edit செய்தும் போலியான வரைபடம் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.


முடிவு:


2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றிய வரைபடத்தை Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட வரைபடத்தை தவெக ஆதரவாளர்கள் பரப்பிவருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.