YouTurn

துபாயில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸில் போலி தங்க நகைள் விற்கப்பட்டதாகப் பரவும் தவறான செய்தி!

துபாயில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸில் போலி தங்க நகைள் விற்கப்பட்டதாகப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ கடந்த 2017-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. “பரவி வரும் செய்தி போலியானது. இந்த சம்வவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கல்யாண் ஜுவல்லர்ஸ் கடந்த 2018 லேயே செய்தி வெளியிட்டுள்ளது.

பரவிய செய்தி

*குவைத்தை* , தொடர்ந்து *துபாயில்* நடந்த சோதனையிலும் *கல்யாண் ஜூவல்லரி* ல் உள்ள நகை களில் *_இரும்பு_* கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு இந்த இரு நாடுகளிலும் கல்யாண் ஜூவல்லரிக்கு *_தடை_* விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது..
எனவே இனி *நகை வாங்க* எந்த கடைக்கு சென்றாலும் கையில் *காந்தத்தோடு( Magnet )* சென்று சோதனை செய்து வாங்குங்கள்.
கீழ் கண்ட கல்யாண் ஜூவல்லரி வீடியோக்களை பாருங்கள் புரியும்..

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

குவைத் மற்றும் துபாயில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸில் நடந்த சோதனையில், நகைகளில் இரும்பு கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனால் இந்த இரு நாடுகளும் கல்யாண் ஜுவல்லர்ஸ் கடைக்கு தடை விதித்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது Malainine Bella என்ற யூடியூப் பக்கத்தில், நவம்பர் 21, 2017 அன்று "தங்கம் போலியாக தயாரித்தல்" என்ற தலைப்பில் பரவி வரும் வீடியோவை பதிவிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. எனவே இந்த வீடியோ 21017 முதலே சமூக வலைதளங்களில் பரவி வருவது தெரியவந்தது. 


இது குறித்து மேலும் தேடி பார்த்தபோது, ஜூலை 24,2025 அன்று Kalyan Jewellers தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவை பார்க்கமுடிந்தது. அதில் “சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கல்யாண் ஜுவல்லர்ஸ் குறித்த போலிச் செய்திக்குப் பின்னால் இருந்த குற்றவாளிகள் 2018ஆம் ஆண்டே கைது செய்யப்பட்டனர்” எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இதையடுத்து News Minute ஊடகத்தில் "Dubai cops act on those spreading fake news on quality of Kalyan Jewellers gold" என்ற தலைப்பில் மார்ச் 30,2018 அன்று இது குறித்து செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் கல்யாண் ஜுவல்லர்ஸ் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காக ஐந்து பேர் மீது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க துபாய் பொது வழக்கறிஞர், துபாய் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

image.png


அதே போல் ஏப்ரல் 1, 2018 அன்று jfw ஊடகத்தில் வெளியான செய்தியிலும், கல்யாண் ஜுவல்லர்ஸ் அளித்த புகாரை தொடர்ந்து, துபாய் காவல்துறை தவறான தகவல்களைப் பரப்பிய ஐந்து பேரை கைது செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

image.png


முடிவு:

நம் தேடலில், பரவி வரும் வீடியோ கடந்த 2017-ல் இருந்தே சமூக ஊடகங்களில் இருப்பதை பார்க்கமுடிந்தது. மேலும் "இந்த சம்வவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கல்யாண் ஜுவல்லர்ஸ் கடந்த 2018 லேயே செய்தி வெளியிட்டுள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க