YouTurn

‘India Today’ இதழ் விஜய் குறித்து அட்டைப்படம் வெளியிட்டதா? உண்மை என்ன?

‘India Today’ இதழ் விஜய் குறித்து அட்டைப்படம் வெளியிட்டதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட அட்டைப்படம் இது. ‘India Today’ இதழ் இதுபோன்று அந்த அட்டைப்படத்தையும் வெளியிடவில்லை.

பரவிய செய்தி

திமுக அதிமுக ஆகிய கட்சிகளுகுக்கு விஜய் சாவலாக இருக்கிறார்.


image.png


X Link / Archive Link


விரிவான விளக்கம்

தேர்தல் நேரத்தில் ‘India Today’ இதழ் அச்சு இதழ் விஜயின் தவெக கட்சி குறித்து சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளதாகவும், ‘தமிழ்நாடு முழுவதும் விசில் சத்தம் கேட்கிறது’ என்று விஜயின் படத்தைக் கொண்டு அட்டைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் சமூக வகைத்தளத்தில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


விஜய் குறித்து இதுபோன்று சிறப்புக் கட்டுரை ஏதும் ‘India Today’ அச்சு இதழ் வெளியிட்டிருக்கிறதா? என்று இணையத்தில் தேடினோம். அவ்வாறு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது. 


image.png


மேலும், பரப்பப்படும் இந்த அட்டைப்படத்தின் ஓரத்தில் ‘அக்டோபர் 26, 2023’ என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.India Today Magazine’ தளத்தில் 2023 ஆண்டுக்கான அட்டைப்படங்களை தேடியதில், இது போன்று எதுவும் வெளியிடப்பட்டிருக்கவில்லை என்பதை காண்கிறோம். 


image.png


மேலும், தவெக கட்சிக்கு ‘விசில்’ சின்னம் 2026 ஜனவரி மாதம் தான் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது. ஆனால் 2023-ல் வெளியான அட்டைப்படத்தில் ‘விசில்’ பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது சற்றும் பொருந்ததாத ஒன்றாகும்.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த படம்  தவறான தேதியுடன் செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.


முடிவு:


செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட அட்டைப்படத்தைக் கொண்டு, தவெக பற்றி  ‘India Today’ இதழ் சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருப்பதாக தவறாக பரப்புகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க