YouTurn

தாமரை மலர் இடம்பெற்றுள்ள புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிடுகிறதா ஒன்றிய அரசு?

தாமரை மலர் இடம்பெற்றுள்ள புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிடுகிறதா ஒன்றிய அரசு?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட படம் இது. 2016ஆம் ஆண்டில் தான் ரிசர்வ் வங்கி கடைசியாக 500 நோட்டு மாதிரியை வெளியிட்டது.

பரவிய செய்தி

நம் மத்திய அரசு விரைவில் வெளியிட இருக்கும் பிளாஸ்டிக் ₹500 ரூபாய் தாள் இதுதானாம்.!  


image.png


Link / Archive Link


விரிவான விளக்கம்

காந்தியின் உருவப்படம் இல்லாமல், பாஜகவின் சின்னமான தாமரை மலர் வண்ண நிறங்களில் இடம் பெற்றிருக்கும் புதிய 500 ரூபாய் நோட்டை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட இருப்பதாகவும், இந்த  ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் காகிதத்தில் செய்யப்படவுள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


புதிய  500 ரூபாய் நோட்டு வெளியிடப்படுவது குறித்து ஒன்றிய அரசு சார்பில் அல்லது ரிசர்வ் வங்கியின் சார்பில் ஏதேனும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா? என்று தேடினோம். ஆனால் அவ்வாறு எந்தவொரு அறிவிப்போ அல்லது செய்தியோ வெளியாகவில்லை என்பதைக் பார்க்க முடிகிறது.


image.png


இதனால்,  ரிசர்வ் வங்கி கடைசியாக வெளியிட்ட திருத்தப்பட்ட 500 ரூபாய் நோட்டு குறித்த தேடினோம். ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ’08/11/2016’ அன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டைக் காணமுடிந்தது. 


அதில் உள்ள 500 ரூபாய் நோட்டு மாதிரியின் முன்பக்கத்தில் காந்தியின் உருவப்படமும், பின்பக்கத்தில் காந்தியின் கண்ணாடியும் இடம்பெற்றிருக்கிறது. மேலும், ரிசர்வ் வங்கி கடைசியாக வெளியிட்ட 500 ரூபாய் மாதிரி நோட்டு இதுதான் என்பது தெரிய வருகிறது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, பாஜகவின் சின்னமான தாமரை மலர் இடம் பெற்றிருக்கும் புதிய 500 ரூபாய் மாதிரி நோட்டு என்று பரப்பப்படும் படம் Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.


முடிவு:


Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட படத்தைக் கொண்டு, ஒன்றிய அரசு புதிய 500 ரூபாய் நோட்டை பிளாஸ்டிக் காகிதத்தில் வெளியிடயிருப்பதாக தவறாக பரப்பி வருகிறார்கள்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க