யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக இல்லை என்று இபிஎஸ் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்ட்!
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
"அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக இல்லாததால் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன்" என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பாலிமர் ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று பரவி வருகிறது.
நான் நிறைய புத்தகங்களை படித்து இருக்கிறேன் - எடப்பாடி !! pic.twitter.com/4dg4b17hxb
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டில் 22-07-2025 என்று குறிப்பிடப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. அதை வைத்து பாலிமர் ஊடகத்தில் இப்படியான நியூஸ் கார்ட் வெளியாகியுள்ளதா என்பதை தேடினோம். அப்போது தனிக்கட்சி மெஜாரிட்டி ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்ற தலைப்பில் ஜூலை 26,2025 அன்று நியூஸ் கார்ட் வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
#JUSTIN || "தனிக்கட்சி மெஜாரிட்டி ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றனர்" | #EdappadiPalaniswami | #ADMK | #PolimerNews pic.twitter.com/hlUfTU7yFo
அதில் தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி அமைவதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் என்று இ.பி.எஸ் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எடிட் செய்து தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக இல்லாததால் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரப்புகின்றனர்.
முடிவு:
எனவே, அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக இல்லாததால் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக என்று பரவுவது போலியான நியூஸ் கார்டாகும்.