யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பதால் போலியாக உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
இந்த கட்சிய ஒழிக்கணும் முதல்ல @TVKVijayHQ
சின்ன பசங்க வாழ்க்கைய நாசம் பன்னிட்டு இருக்கான்.


விரிவான விளக்கம்
கடந்த 2025 டிசம்பர் 28ஆம் தேதி திருத்தணி இரயில் நிலையம் அருகே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை நான்கு சிறுவர்கள் கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த நிகழ்வு தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் இதற்கும் முன்பு பல சந்தர்ப்பங்களில் பட்டாக் கத்தியுடன் வன்முறையை தூண்டும் வகையில் பாடல் பாடி ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பது தெரியவந்தது. இவர்களை போல் பல சிறார்களும் இளைஞர்களும் பட்டாக் கத்தியுடன் வன்முறையை தூண்டும் வகையில் ரீல்ஸ் செய்வது ஒரு ட்ரெண்டாக மாறியுள்ளது. இது திருத்தணியில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தையொட்டி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், தவெக கட்சியின் துண்டை அணிந்து இளைஞர் ஒருவர் பட்டாக் கத்தியுடன் வன்முறையாக ரீல்ஸ் செய்வதாக வீடியோ ஒன்றை திமுக ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.
இந்த கட்சிய ஒழிக்கணும் முதல்ல @TVKVijayHQ 💯
சின்ன பசங்க வாழ்க்கைய நாசம் பன்னிட்டு இருக்கான்🤦♀️🚶♀️ pic.twitter.com/Oq5v4SSLih
விஜினாவின் வளர்ப்பு@TVKVijayHQ @TVKHQITWingOffl pic.twitter.com/mNECLD7aC9
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடினோம். நம்பகமான எந்த தளத்திலும் இந்த வீடியோவைக் காணமுடியவில்லை. பல்வேறு உதிரியான சமூக வலைத்தள நபர்களால் மட்டுமே இந்த வீடியோ பரப்பப்பட்டிருப்பதைக் கண்டோம்.

இதனால், ‘Hive Moderation’ என்ற வலைதளத்தை பயன்படுத்தி இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா? என்று சோதனை செய்தோம். அதன்படி இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

மேலும், சமூக வலைத்தளத்தில் தவெக கட்சியின் துண்டு இல்லாமல் பட்டாக் கத்தியுடன் அந்த இளைஞர் ரீல்ஸ் செய்திருக்கும் வீடியோவை பதிவிட்டு, ‘இதுதான் உண்மையான வீடியோ, திமுகவினர் தான் இதனை எடிட் செய்து தவறாக பரப்புகிறார்கள்’ என்று தவெக ஆதரவாளர்கள் பதிவிட்டிருப்பதை காணமுடிந்தது. இதனையும் ‘Hive Moderation’ வலைத்தளத்தில் சோதனை செய்தோம். ஆனால் இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதால் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அதன் முடிவு தெரிவிக்கிறது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, தவெக துண்டு அணிந்து ரீல்ஸ் செய்ததாக பரப்பப்படும் இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதால் போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பது நிரூபணமாகிறது.
முடிவு:
தவெக கட்சி துண்டை அணிந்து கொண்டு பட்டாக் கத்தியுடன் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்வதாக பரப்பப்படும் வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதால் போலியாக உருவாக்கப்பட்டதாகும்.