யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
தமிழ் வேண்டாம்! திமுக அரசு உத்தரவு.! இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என திமுக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சிறுபான்மை மொழிகளில் தேர்வை எழுதிக்கொள்ளவும் அனுமதி. தமிழையே தேவையில்லை என்று ஒதுக்கியதன் மூலம் உங்களின் போலி தமிழ்ப்பற்று வெளிப்பட்டுவிட்டது முதல்வரே.!

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 26ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் ‘தமிழ் வேண்டாம்! திமுக அரசு உத்தரவு!’ என்கிற தலைப்பில் பாஜகவின் அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு கார்டு பதிவிடப்பட்டுள்ளது.
அதில், ”இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என திமுக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சிறுபான்மை மொழிகளில் தேர்வை எழுதிக்கொள்ளவும் அனுமதி. தமிழையே தேவையில்லை என்று ஒதுக்கியதன் மூலம் உங்களின் போலி தமிழ்ப்பற்று வெளிப்பட்டுவிட்டது முதல்வரே” என்றுள்ளது.
இதேபோன்ற தகவலை வேறு சிலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
உண்மை என்ன?
பாஜக பதிவிட்டுள்ள கார்டில் உள்ள தகவல் குறித்து இணையத்தில் தேடினோம். நியூஸ் 18 தமிழ்நாடு கடந்த 12ம் தேதி ’சிறுபான்மை மொழி மாணவர்: தமிழ் தேர்வு விலக்கு’ என்கிற தலைப்பில் நியூஸ் கார்டு ஒன்றைப் பதிவிட்டுள்ளது.
அதில், ”தாய் மொழியாக தமிழ் அல்லாத சிறுபான்மை மொழி மாணவர்கள், தமிழ் மொழிப்பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2023-24 ஆண்டுக்கு மட்டும் விலக்கு” எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக 2023, பிப்ரவரி மாதம் ’தந்தி டிவி’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதனை பின்பற்றி தேர்வுத்துறை அறிவிப்பு’ என்ற தகவலும் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகள் அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. இம்மொழிகள் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும் கிடையாது.
உதாரணமாக, வேலூர் போன்ற முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உருது மொழி கற்பிக்கப்படுகிறது. ஓசூர் போன்ற எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் கற்பிக்கப்படுகிறது. அதேபோல், சமஸ்கிருதம் மற்றும் அரபிக் மொழி கற்பிக்கும் ஓரியண்டல் பள்ளிகளும் உள்ளன. மற்ற அனைத்து பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது.
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 30ன் படி, மதம் மற்றும் மொழி சிறுபான்மையினர் தங்களுக்கான கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் உரிமை உண்டு.
மேலும் படிக்க : தமிழகத்தில் உருது மட்டுமே கற்பிக்கப்படுகிறதா ?| சிறுபான்மை மொழி கற்பிக்கும் அரசு பள்ளிகள்.
தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் ஆட்சியில் ‘கட்டாயத் தமிழ்க் கற்றல் சட்டம் - 2006’ கொண்டுவரப்பட்டது. இச்சட்டப்படி தமிழ்நாட்டில் உள்ள தனியார்ப் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தமிழை ஒரு பாடமாகப் படிக்க வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக 2016ம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத மொழி சிறுபான்மையின மாணவர்கள் சார்பில் தங்களது தாய் மொழியில் தேர்வெழுதப் பள்ளிக் கல்வித் துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றமும் மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென இடைக்கால உத்தரவு பிறப்பித்து.
இதற்கிடையில் 2015-16 கல்வியாண்டு முதல் படிப்படியாகக் கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை அமல்படுத்த ஏதுவாக அப்போதைய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், 2015-16 கல்வியாண்டு முதல் ஆண்டுதோறும் ஒவ்வொரு வகுப்பாகத் தமிழ் கற்றல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டும் எனக் கூறியுள்ளார்.
நடப்பு கல்வியாண்டில் கட்டாயத் தமிழ் தேர்வு எழுதுவதிலிருந்து சிறுபான்மை மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு விலக்களிப்பது தொடர்பாகக் கடந்த 12ம் தேதி பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையில் உள்ள தகவலின்படி, சென்னை உயர் நீதிமன்றம் 2020 முதல் 2022 கல்வியாண்டு வரையில் மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கு மாணவர்களுக்குத் தமிழ் மொழித் தாள் எழுதுவதிலிருந்து விலக்கு அளித்துத் தீர்ப்பளித்துள்ளது. இதே போன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் 2023ம் கல்வியாண்டுக்கும் வழங்கியுள்ளது.
தற்போது தமிழக மொழி சிறுபான்மை பேரவையின் சார்பில் மொழி சிறுபான்மையின மாணவர்களுக்கு விலக்களிக்கக் கோரி அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது மொழி சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே. இது 2020ம் கல்வியாண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
முடிவு :
மொழி சிறுபான்மையின மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழிப்பாடத்திற்குப் பதிலாக அவர்களது தாய் மொழிப் பாடத்தை எழுதலாம் என்கிற நடைமுறை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆட்சிக் காலத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது.
இக்கல்வியாண்டு சிறுபான்மை மொழி பேரவையின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து அம்மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கு அனைத்து பள்ளிகளுக்கும் கிடையாது. சிறுபான்மை மொழி பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

திமுக காரங்க சோத்துல உப்பு இருக்கா?
(இருக்காது. இருக்க வாய்ப்பே இல்லை. இருந்திருந்தா தூக்குப்போட்டு தொங்கியிருப்பார்களே?!)
செய்தி: "தமிழை தாய் மொழியாக கொண்டிராத, 10-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு"
வரும் 26 ஆம் தேதி… pic.twitter.com/xAmpO1hLZN
— ARUL Rathinam (@arulgreen) March 13, 2024
இதேபோன்ற தகவலை வேறு சிலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
உண்மை என்ன?
பாஜக பதிவிட்டுள்ள கார்டில் உள்ள தகவல் குறித்து இணையத்தில் தேடினோம். நியூஸ் 18 தமிழ்நாடு கடந்த 12ம் தேதி ’சிறுபான்மை மொழி மாணவர்: தமிழ் தேர்வு விலக்கு’ என்கிற தலைப்பில் நியூஸ் கார்டு ஒன்றைப் பதிவிட்டுள்ளது.
அதில், ”தாய் மொழியாக தமிழ் அல்லாத சிறுபான்மை மொழி மாணவர்கள், தமிழ் மொழிப்பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2023-24 ஆண்டுக்கு மட்டும் விலக்கு” எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக 2023, பிப்ரவரி மாதம் ’தந்தி டிவி’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதனை பின்பற்றி தேர்வுத்துறை அறிவிப்பு’ என்ற தகவலும் இடம் பெற்றுள்ளது.
#BREAKING |10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு
அவரவர் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி
உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதனை பின்பற்றி தேர்வுத்துறை அறிவிப்பு pic.twitter.com/7aIzsu2r51
— Thanthi TV (@ThanthiTV) February 15, 2023