யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘லாரா வூல்வார்ட்’ பெயரில் இயங்கிவரும் ஒரு போலியான பக்கத்திலிருந்து (Parody Account) பதிவிடப்பட்ட ட்வீட்டிற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
பரவிய செய்தி
Throughout this journey, one cricketer stood like a champion & that’s their captain, Laura Wolvaardt. Getting two centuries on the trot in the semifinals and finals, scoring record runs in this World Cup and still seeing the game with a perspective that many lose at the time of winning and more so at the time of losing, for me, tops everything she has & will accomplish!
Many congratulations on a great World Cup.

விரிவான விளக்கம்
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நவம்பர் வரை இந்தியாவில் உள்ள மைதானங்களில் நடைபெற்றது. அதில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. அதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது குறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் லாரா வூல்வார்ட் “நான் அழவில்லை. இந்தியாவிற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்று ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருப்பதாக ட்வீட் ஒன்று பரவியது. லாரா வூல்வார்ட்டின் பெயரில் உள்ள இந்த பதிவிற்கு தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையும் பதில் ட்வீட் செய்துள்ளார்.
Sports can sometimes be very cruel, as there can only be one winner.
Very little separates champions at the top level - an edge that’s thinner than a hard one, a dropped chance, advantage of winning a toss & many other things…
What the SA women’s team accomplished after… https://t.co/esFIwj0nMq
உண்மை என்ன?
’லாரா வூல்வார்ட்’ பெயரில் உள்ள அந்த ‘எக்ஸ்’ பக்கத்தை பார்க்கும்போது, அதில் ’Parody Account’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ’Parody Account’ என்பது சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயரில் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கி, அவர்களைப் போலவே (imitates) பதிவிடுவது அல்லது விஷயங்களை நகைச்சுவையாக (satirizes) பதிவிடுவது ஆகும். இது அந்த பிரபலங்களின் அதிகாரப்பூர்வமான பக்கங்கள் அல்ல.

‘லாரா வூல்வார்ட்’-ன் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கம் - https://x.com/laurawolvaardt இதுதான்.

இருப்பினும் “நான் அழவில்லை. இந்தியாவிற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்று ’லாரா வூல்வார்ட்’ குறிப்பிட்டிருக்கிறாரா ?என்று இணையத்தில் தேடினோம். ‘துரதிர்ஷ்டவசமாக நாங்கள் தோல்வியடைந்தோம், ஆனால் நாங்கள் இதிலிருந்து நிச்சயமாக மீண்டு வருவோம்… நாங்கள் காட்டிய மன உறுதியைப் நினைத்து பெருமைப்படுகிறோம்’ என்று தான் அவர் பேசியிருப்பதாக செய்திகள் மூலமாக தெரியவருகிறது.

இதிலிருந்து, ’நான் அழவில்லை. இந்தியாவிற்காக மகிழ்ச்சியடைகிறேன்’ என்று லாரா வூல்வார்ட் ட்வீட் எதுவும் பதிவிடவில்லை என்பது தெரியவருகிறது. அது அவருடைய பெயரில் இயங்கிவரும் ஒரு போலியான பக்கத்தால் (Parody Account) பதிவிடப்பட்டதாகும்.
முடிவு:
‘லாரா வூல்வார்ட்’ பெயரில் இயங்கிவரும் ஒரு போலியான பக்கத்திலிருந்து (Parody Account) பதிவிடப்பட்ட ட்வீட்டை, ‘லாரா வூல்வார்ட்டின் அதிகாரப்பூர்வ ட்வீட் என நம்பி அண்ணாமலை பதிலளித்துள்ளார்.