YouTurn

ஈரோடு கிழக்கில் ஓட்டுக்காக கொடுத்த குக்கர் வெடித்ததாக தவறாகப் பரப்பப்படும் கர்நாடகா விபத்து !

ஈரோடு கிழக்கில் ஓட்டுக்காக கொடுத்த குக்கர் வெடித்ததாக தவறாகப் பரப்பப்படும் கர்நாடகா விபத்து !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

ஈரோடு கிழக்கில் திமுக கொடுத்த குக்கர் திடீரென வெடித்தது



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரங்கள் ஒருபுறம் இருக்க வாக்காளர்களுக்குப் பணம், குக்கர், கொலுசு போன்ற பொருட்கள் கொடுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவி வருகிறது. 

https://twitter.com/JuniorVikatan/status/1627622707482206208

Archive link 

https://twitter.com/sunnewstamil/status/1627609817421586433

Archive link 

எனினும், சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவை ஆதாரமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியிருந்தார்.

https://twitter.com/GowriSankarD_/status/1628322051760222208

Archive link 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் கொடுத்த குக்கர் வெடித்து பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்றை பரப்பி வருகின்றனர்.

https://twitter.com/PSM21975640/status/1628407373764395009

Archive link 

அதில், திடீரென வெடித்துச் சிதறியது ஓட்டுக்காகக் கொடுத்த குக்கர்… வெந்துபோனது பெண்ணின் முகம், கை… பீதியில் இலவசம் பெற்ற மக்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன ?

பரவக் கூடிய புகைப்படத்தில் ‘தந்தி டிவி’ என இருப்பதைக் காண முடிகிறது. இதனைக் கொண்டு தந்தி டிவியில் ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா எனத் தேடினோம். அவர்களது யூடியூப் பக்கத்தில் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

அதில், “கர்நாடகாவில் சட்டப்பேரவை நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பரிசுப் பொருட்கள் விநியோகமும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு, சோமேஷ்வரா காலனி பகுதியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாகச் சமையல் குக்கர்களை வழங்கி வருகின்றனர்.



இதனிடையே இலவசமாக வந்த குக்கரில் சமைத்துக் கொண்டிருந்த போது, தீடிர் என வெடித்துச் சிதறியதில் பெண்ணுக்கு தீ காயம் ஏற்பட்டது” எனக் கூறப்பட்டுள்ளது. 



Twitter link 

இதிலிருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நிகழ்ந்த குக்கர் விபத்தைத் தமிழ்நாட்டில் நடந்தது போல ஒரு தவறான செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவது தெரிய வருகிறது.

மேலும் படிக்க : ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதா ?

இதே போல், ஈரோடு கிழக்கு சட்டமன்ற  இடைத்தேர்தல் தொடர்பாக பரவிய போலி செய்திகளின் உண்மைத் தன்மையை யூடர்ன் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க : ‘பிரச்சாரத்திற்கு வராதீர்கள்’ என பாஜகவிடம் அதிமுக கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

முடிவு : 

நம் தேடலில், ஈரோட்டில் ஓட்டுக்காகக் கொடுக்கப்பட்ட குக்கர் வெடித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மை அல்ல. அது கர்நாடகா மாநில பெங்களூரில் நடந்தது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க