YouTurn

2020ல் எடுத்த வயதான பாட்டி அரசைக் கேள்வி கேட்கும் வீடியோவை திமுக ஆட்சி எனப் பொய் பரப்பும் அதிமுகவினர் !

2020ல் எடுத்த வயதான பாட்டி அரசைக் கேள்வி கேட்கும் வீடியோவை திமுக ஆட்சி எனப் பொய் பரப்பும் அதிமுகவினர் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விழித்துக்கொண்ட ஈரோடு மக்கள். ரூ1000 வாங்கினியே என்றதற்கு அந்த பாட்டியோட பதில்... விடியலின் சாதனை பட்டியலை விளக்கிய பாட்டி.....,.சபாஷ்...

Kovai Sathyan admk

Twitter link | Archive link

விரிவான விளக்கம்

மூதாட்டி ஒருவரிடம் அரசு ரூ.1000 வழங்கியது தொடர்பாகக் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு அவர், “அது யாருடைய பணம்? நாம் செலுத்தும் வரிப்பணம்” எனப் பதிலளிக்கிறார். இந்த வீடியோவை அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து திமுக ஆட்சியை விமர்சித்து இருக்கிறார். 

https://twitter.com/sankar_ndt/status/1620476229391613952

Archive link 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அத்தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

https://twitter.com/NagarajspkIt/status/1620402258117804032

Archive link 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் நிலையில், இவ்வீடியோ ஈரோடு பகுதியில் எடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடும் வகையில், “ஈரோடு மக்கள் விழித்துக் கொண்டார்கள்” எனக் குறிப்பிட்டு பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ? 

கோவை சத்யன் பதிவிட்ட வீடியோ கீ ஃபிரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். அவ்வீடியோவை 'முஹம்மது யூனுஷ்' என்பவர் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/yunustrichy/status/1255105287746228224

Archive link 

அதில், எடப்பாடி கொடுத்த 1000 ரூபாய் மக்களின் வரிப் பணம் தான் என்பதை இந்த கிராமத்து பாட்டி எந்த மாதிரி ஸ்லாங்கில் சொல்றாங்க பாருங்க மக்களே!” என அதிமுக அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார். 

https://twitter.com/Rajesh02583490/status/1255108759141023750

Archive link 

அன்றைய தேதிகளில் இதே வீடியோவினை முஹம்மது யூனுஷ் பதிவிட்ட அதே வாசகங்களுடன் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் திமுகவைச் சேர்ந்தவர்களும் பதிவிட்டுள்ளனர். 

2020ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது அதிமுக. அக்காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவினை திமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது போல ஒரு தவறான தகவலை அதிமுகவினர் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க : முதல்வரின் கொளத்தூர் தொகுதி அலுவலகம் முன்பு தண்ணீர் தேங்கியதாகப் பழைய படத்தைப் பரப்பும் அதிமுக, பாஜகவினர் !

இதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதி அலுவலகத்தின் முன்பாக மழைக் காலத்தில்  தண்ணீ தேங்கி இருந்ததாக 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, 2022 நவம்பர் மாதத்தில் நிகழ்ந்தது போல கோவை சத்யன் பதிவிட்டிருந்தார். அதன் உண்மைத் தன்மை குறித்து 'யூடர்ன்' கட்டுரை வெளியிட்டது.

முடிவு : 

நம் தேடலில், மூதாட்டி ஒருவர் 1000 ரூபாய் அரசிடம் இருந்து பெற்றதாகவும், அது குறித்து விமர்சித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ 2020ம் ஆண்டே சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இதில் இருந்து அவ்வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதையும், 2020ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது அதிமுக என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க