
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X Link | Archive Link
விரிவான விளக்கம்
இந்நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை காரணம்காட்டி, இன்றைய சட்டபேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில், "நான் சொன்ன விஷமுறிவு மருந்தின் பெயர் FOMEPIZOLE Injection. விடியா திமுக அமைச்சர் மா. சுப்ரமணியன் சொல்வது OMEPRAZOLE Capsule. அது அல்சர் மாத்திரை. அவர் பெயரை மாற்றிச் சொல்கிறார். FOMEPIZOLE இங்கு எங்கும் கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
நான் சொன்ன விஷமுறிவு மருந்தின் பெயர் FOMEPIZOLE Injection. விடியா திமுக அமைச்சர் @Subramanian_ma சொல்வது OMEPRAZOLE Capsule. அது அல்சர் மாத்திரை. பெயரை மாற்றிச் சொல்கிறார்.
FOMEPIZOLE எங்கும் கிடைக்கவில்லை.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu… pic.twitter.com/1lmjZKp09g
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) June 22, 2024
அதிமுகவினர் பலரும் இதனை தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
மாண்புமிகு அமைச்சரே மா.சு அவர்களே, எடப்பாடியார் அவர்கள் குறிப்பிட்ட மருந்தின் பெயர் Fomepizole. மெத்தனாலுக்கான Anti-Drug..
Omeprazole என்பது அல்சர் மாத்திரை ! #Resign_Stalin #Kallakurichi pic.twitter.com/hs4bcf4tEW
— Political Trends™ (@PoliticalTrnds) June 21, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை என்பது குறித்து நேற்று (ஜூன் 21) ஊடகத்திற்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “கள்ளச்சாராயம் குடித்தது, குணமடைய வேண்டுமென்றால், Omeprazole என்ற மருந்து இருந்திருந்தால், விஷச்சாராயம் அருந்தியவர்களை குணப்படுத்திருக்க முடியும். ஆனால் தமிழ்நாட்டில் எந்த மருத்துவமனையிலும் இது இல்லை” என்று பேசியுள்ளதை தெளிவாகக் காண முடிகிறது.
ஆனால் இன்று ஊடகத்திற்கு பேட்டியளிக்கையில், “நான் சொன்ன விஷமுறிவு மருந்தின் பெயர் FOMEPIZOLE Injection. ஆனால் திமுக அமைச்சர் மா.சுப்ரமணியம் சொல்வது OMEPRAZOLE Capsule. அது அல்சர் மாத்திரை. பெயரை மாற்றிச் சொல்கிறார்” என்று திரித்து பேசியுள்ளார்.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது அதிமுக நிர்வாகி எனப் பரவும் போலி செய்தி!
மேலும் படிக்க: 2024 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் தமிழ்நாடுப் பிரிவு அதிமுகவிற்கு ஆதரவா ?.. நியமிக்கப்படாத நபரின் கடிதம் !
இதற்கு முன்பும் அதிமுக குறித்து பரவிய போலி செய்திகளை ஆய்வு செய்து நம் பக்கத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: ‘விபூதியை அழித்த பங்காளி கட்சி’ என அதிமுக குறித்துப் பொய் சொன்ன அண்ணாமலை!
முடிவு:
மொத்தத்தில் "Omeprazole" மருந்து குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியே பேசிவிட்டு, தற்போது தான் பேசவில்லை என்று தவறாகத் திரித்து பேசுவதை தெளிவாகக் காண முடிகிறது.