YouTurn

ஸ்மிருதி இரானி வடிவில் அம்மாவை கண்டேன்.. எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !

ஸ்மிருதி இரானி வடிவில் அம்மாவை கண்டேன்.. எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஆதரவாக வாக்களித்ததில் என்ன தவறு? டெல்லி நிர்வாக திருத்த மசோதாவால், அந்த மாநில மக்களுக்கு நல்லதே நடக்கும். அதனால்தான் வாக்களித்தோம். பாஜக கொண்டுவரும் அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிக்கும் - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி

Twitter Link | Archive Link

இன்றைய நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி ராணி வடிவில் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை கண்டேன். - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. 



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 அன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், டெல்லி உயரதிகாரிகள் நியமன மசோதாவை ஒன்றிய அரசு கடந்த வாரம் தாக்கல் செய்தது. இதற்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 8 அன்று அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக மோடி தலைமையிலான அரசு திறம்பட செயல்படாததைக் கண்டித்தும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து கடந்த இரு நாட்களாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் "ஆதரவாக வாக்களித்ததில் என்ன தவறு? பாஜக கொண்டுவரும் அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிக்கும்" என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகக் கூறி புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

இதேபோன்று "இன்றைய நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி ராணி வடிவில் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை கண்டேன்." என்று அவர் கூறியதாகவும் தந்தி டிவியின் நியூஸ் கார்டும் வைரலாகப் பரவி வருகிறது. 



Archive Link

Twitter LinkArchive Link:

உண்மை என்ன?

பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், அவர்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவது போன்று எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.

மேலும் பரவி வரும் புதியதலைமுறை நியூஸ் கார்டில், ஆகஸ்ட் ௦8, காலை 10 மணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த நேரத்தில் "தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை விடுவித்தது இலங்கை" என்ற தலைப்பில் தான் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது.



அதே போன்று தந்தி டிவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், அவர்களும் சமூக ஊடகங்களில் பரவி வருவது போன்று எந்த நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.

மேலும் பரவி வரும் செய்திகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஏதேனும் செய்தி வெளியிட்டிருக்கிறாரா என அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடியதில், இறுதியாக ஆகஸ்ட் 6 அன்று ராஜீவ் காந்தி மருத்துவமனை குறித்த அவருடைய பதிவையையே காண முடிந்தது. இது தவிர எம்பி ஸ்மிருதி இரானி குறித்தோ, டெல்லி நிர்வாக மசோதா குறித்தோ அவர் எந்த இடத்திலும் இவ்வாறு பேசவோ, அறிக்கை வெளியிடவோ இல்லை.



எனவே எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் புதியதலைமுறை மற்றும் தந்திடிவின் இரண்டு நியூஸ் கார்டுகளும் எடிட் செய்யப்பட்டவை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.முடிவு:

நம் தேடலில், பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்தோ, டெல்லி நிர்வாக மசோதா குறித்தோ எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவி வரும் புதியதலைமுறை மற்றும் தந்தி டிவியின் நியூஸ்கார்டுகள் போலியானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க