யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு வரும் மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக 5 நாள் பயணமாக தனது குடும்பத்துடன் தற்போது கொடைக்கானல் சென்றுள்ளார். இதற்கு முன்பும் 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்தவுடன் அவர் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த இரண்டு செய்திகளையும் தொடர்புபடுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைகானல் சென்று வந்த பிறகே, அங்கே இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று கூறி பாஜகவைச் சேர்ந்த செல்வக்குமார் உட்பட பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் இந்த செய்தியை வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், சென்னை உயர்நீதிமன்றமே, ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு வரும் மே 7 முதல் ஜூன் 30 வரை இபாஸ் நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்ரவர்த்தி தலைமையிலான அமர்வு நேற்று (ஏப்ரல் 29) இது குறித்த வழக்கை விசாரித்தது. இந்த விசாரணையில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களும் காணொளி மூலம் ஆஜராகினர்.
அப்போது அரசு வழக்கறிஞர்கள் தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீலகிரிக்கு தினமும் சீசன் நேரங்களில் 11509 கார்கள், 1341 வேன்கள், 637 பேருந்துகள், 6524 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 20,011 வாகனங்கள் வருகின்றன என்றும், இவ்வாறு ஊட்டி, கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆய்வு செய்யப்படவுள்ளது என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.
எனவே அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், ஐஐடி, ஐஐஎம் சார்பில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, கொரோனா காலத்தில் பின்பற்றியது போன்று இபாஸ் முறையை, கோடைகாலத்தில் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களுக்கு வருகின்ற மே 7 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைமுறை படுத்த வேண்டும் என்று கூறி நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இதற்தாக பொதுமக்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், உள்ளூர் மக்களுக்கும், அன்றாட தேவைகளுக்காக செல்லக்கூடிய வாகனங்களுக்கும் இந்த இபாஸ் நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இபாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்றுள்ளதும் தவறாக தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளே, இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டடுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.
முடிவு:
நம்தேடலில், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இபாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொடைக்கானல் பயணத்துடன் தொடர்புபடுத்தி பரப்பப்படும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

முதல்வர் சென்னை திரும்பிய பிறகு கொடைகானல் செல்ல இ-பாஸ் அறிமுகம். pic.twitter.com/0zrAZ3CAjC
— Selva Kumar (மோடியின் குடும்பம்) (@Selvakumar_IN) April 29, 2024