YouTurn

அம்பேத்கரை அவமதித்த திமுக எம்எல்ஏ என்று பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

அம்பேத்கரை அவமதித்த திமுக எம்எல்ஏ என்று பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாடு முழுவதும் ஏப்ரல் 14 அன்று 135வது அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி அண்ணல் அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதித்த திமுக எம்எல்ஏ. திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தியின் கண்களுக்கு அம்பேத்கர் புகைப்படம் மட்டும் தெரியவில்லை.   இவங்க திருந்தவே மாட்டாங்க, இவங்களுக்கு வாக்களிக்கும் மக்களாகிய நாம் தான் சிந்திக்கணும், திருந்தணும்.


.X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2022-ல்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல்14-ம் தேதி, "சமத்துவ நாளாக" கொண்டாடப்படும் என்று சட்டமன்ற விதி எண்.110-ன் கீழ் அறிவித்தார்.


அதன்படி ஏப்ரல் 14 அன்று 135வது அம்பேத்கர் ஜெயந்தி சமத்துவ நாளாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி அண்ணல் அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


பரவி வரும் வீடியோவில் திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி,  வரிசையாக பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநதி ஆகியோரின் படத்திற்கு மரியாதை செலுத்துவதையும், அம்பேத்கரின் படத்திற்கு மரியாதை செலுத்தாதையும் காண முடிந்தது. 


#திராவிட_மாடல் pic.twitter.com/H5XcJC4RAk

— யுவராஜ் தாமோதரன் (@YUVARAJDHAMODHA) April 15, 2025


#தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/SWfmQxKUMd

— Ꮶʀɪꜱʜ ッ TVK (@krishEd01) April 15, 2025


உண்மை என்ன?


ஆய்வு செய்ததில், சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் வீடியோவில் அம்பேத்கரின் புகைப்படத்திற்கு முன்பு மலர்கள் தூவப் பட்டிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. 


எனவே பரவி வரும் வீடியோ எடிட் செய்யப்பட்டிருக்கலாம என்ற சந்தேகம் எழவே அதன் முழு வீடியோவை ஆய்வு செய்தோம். 


அதில், திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, அண்ணல் அம்பேத்கரின் புகழ் ஓங்குக என்று கூறி முதலில் அம்பேத்கரின் படத்திற்கு தான் மரியாதை செலுத்துகிறார். பின்னர் அவர் வரிசையாக பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநதி ஆகியோரின் படத்திற்கு மரியாதை செலுத்துவதை முழு வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது. 


இந்நிலையில் அவர் அம்பேத்கரின் படத்திற்கு மரியாதை செலுத்துவதை மட்டும் நீக்கி விட்டு பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. 


முடிவு: 


நம் தேடலில், திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தாமல் அவமதிப்பு செய்ததாகக் கூறிப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.