யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தப் புகைப்படங்கள் போலியாக ‘Edit’ செய்து உருவாக்கப்பட்டவை ஆகும்.
பரவிய செய்தி
எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் அருகில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.


விரிவான விளக்கம்
ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற அமெரிக்க நிதி அதிபதி பாலியல் குற்றத்திற்காகவும், குழந்தைகள் உட்பட பல பெண்களை கடத்தி பாலியல் சுரண்டலுக்கு ஆட்படுத்தியதற்காகவும் தண்டனை விதிக்கப்பட்டவர். சமீபத்தில், எப்ஸ்டீன் சேமித்து வைத்திருந்த கோப்புகள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் ஆகியவை அடங்கிய கோப்புகள் எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) என்ற பெயரில் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டது. எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது இந்தியாவில் பெரும் விமர்சனத்தை உண்டாக்கியிருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி விமானப் பயணம் செய்யும் போதும் காரில் பயணம் செய்யும் போதும் பெண்கள் உடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் திமுக கட்சியினரால் பரப்பப்படுகிறது.
भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी का नाम #EpsteinFiles में आना देश के लिए बहुत शर्मनाक है।
2019 में मोदी की जीत के कुछ ही दिनों बाद, बाल यौन शोषण के लिए वित्तीय सहायता देने वाले #JeffreyEpstein ने स्टीव बैनन को "मोदी के साथ एक बेहद दिलचस्प मुलाकात" के बारे में संदेश भेजा था। pic.twitter.com/YOY2ljKw6T
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படங்களை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடினோம். முதல் படத்தைக் கொண்டு தேடியபோது, பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில், மோடி ரஷ்யா நாட்டின் அதிபர் விளாதிமிர் புதின்-வுடன் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை காணமுடிந்தது. இந்த புகைப்படம் 2025 டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்த போது எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Delighted to welcome my friend, President Putin to India. Looking forward to our interactions later this evening and tomorrow. India-Russia friendship is a time tested one that has greatly benefitted our people.@KremlinRussia_E pic.twitter.com/L7IORzRfV9
இரண்டாவது படத்தைக் கொண்டு தேடியபோது, மோடி மான்சி சோனி என்ற ஒரு கட்டிடக் கலை நிபுணருடன் இருக்கும் பழைய புகைப்படம் காணக் கிடைத்தது. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, இந்த மான்சி சோனி என்ற கட்டிடக் கலைஞரை சட்டவிரோதமாக உளவு பார்த்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது புகைப்படத்தை கொண்டு தேடியபோது, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிநாட்டு பயணம் ஒன்றின் போது எடுக்கப்பட்டதாக சொல்லி பிரதமர் மோடி இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டிருப்பதை காண்கிறோம். இந்த புகைப்படத்தில் பிரதமர் மோடி தனியாக அமர்ந்து கோப்புகளை படிப்பது போன்று காட்சிபடுத்திப்பட்டுள்ளது. அருகில் இருக்கும் இருக்கையில் சூட்கேஸ் மட்டுமே உள்ளதையும் காண்கிறோம்.
A long flight also means opportunities to go through papers and some file work. pic.twitter.com/nYoSjO6gIB
இதிலிருந்து பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின், மான்சி சோனி போன்றோருடன் இருக்கும் புகைப்படங்களை ‘Edit’ செய்து, பெண்களுடன் அமர்ந்திருப்பது போன்ற போலியான படங்கள் உருவாக்கப்பட்டிருப்பதை அறிகிறோம்.
முடிவு:
‘Edit’ செய்து போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு, எப்ஸ்டீன் கோப்புகளில் மோடி பெண்கள் உடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது.