YouTurn

’ஜனநாயகன்’ படத்தை கசியவிட்டதற்காக திமுகவினர் கைது என பரப்பப்படும் புகைப்படங்கள்! உண்மை என்ன?

’ஜனநாயகன்’ படத்தை கசியவிட்டதற்காக திமுகவினர் கைது என பரப்பப்படும் புகைப்படங்கள்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த புகைப்படங்கள் இரண்டும், Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டவை ஆகும்.

பரவிய செய்தி

#Breaking DMK ITwing functionaries arrested for #JanaNayagan leak.



Link / Archive Link


விரிவான விளக்கம்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் பிரச்சினை காரணமாக வெளியாகாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மறு தணிக்கை குழு ’ஜனநாயகன்’ படத்தை பார்வையிடயிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் படம் விரைவில் வெளியாகும் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், முழுப் படமும் இணையத்தில் கசிந்தது. 


இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் கசியவிட்டது திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் (IT Wing) தான் என்றும், அவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தவெக ஆதரவாளரால் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


பரப்பப்படும் இரண்டு புகைப்படங்களையும் ’Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடிய போது, ’இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது.


அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக வெளியான இந்த செய்தியில் பரப்பப்படும் முதல் புகைப்படத்தைக் காணமுடிகிறது. ஆனால் உண்மையான புகைப்படத்தில் இருக்கும் சட்டையின் நிறத்தை Edit செய்து மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் காணமுடிகிறது. 



அடுத்ததாக, ‘The News Minute’ ஆங்கில செய்தித்தளத்தில் 2019 டிசம்பர் மாதம் கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து வெளியான செய்தி ஒன்றில், இரண்டாவது புகைப்படத்தைக் காணமுடிகிறது. இந்த புகைப்படத்தில் குற்றவாளி கைக்குட்டையால் முகத்தை முழுவதுமாக மூடியிருப்பதைக் காண்கிறோம். இதனை Edit செய்து முகம் தெரிவது போன்றும், சட்டையின் நிறத்தையும் மாற்றி போலியான புகைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். 



மேலும் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியான செய்தியின் படி, ‘ஜனநாயகன்’ படத்தை கசியவிட்டதற்காக 6 பேரை சைபர் கிரைம் போலிஸார் கைது செய்திருப்பதாக தெரிகிறது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் படத்தை முதன் முதலாக கசியவிட்டவர்களா? அல்லது பகிர்ந்தவர்களா? என்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களும் வெளியிடப்படவில்லை. 


இவ்வாறு பரப்பப்படும் இந்த புகைப்படங்கள் இரண்டும் Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டவை என்பது தெரிகிறது.


முடிவு:


Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட திமுக இணைய அணியினர் கைது என்று தவறான தகவலை பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க