யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உதயநிதியுடன் ‘GenZ DMK’ குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை Edit செய்து போலியான புகைப்படத்தை உருவாக்கி அதனை பரப்பி வருகிறார்கள்.
பரவிய செய்தி
நல்லா இருக்குடா meetup உபிஸ்
GenZ meetup நடத்தும் குழுவினரை அழைத்து மது விருந்து வைத்த உதய்

விரிவான விளக்கம்
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தது. திமுக-வின் இந்த தோல்விக்கு Gen Z தலைமுறையிடம் அரசியலை கொண்டு சேர்க்காததும் முக்கியமான குறைபாடாக சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திமுகவைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ‘GenZ DMK’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், திமுகவின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இந்த ‘GenZ DMK’ குழுவைச் சேர்ந்தவர்களும் Shorts மற்றும் Sleeveless உடையணிந்து, மது பாட்டில்களை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, உதயநிதி ஸ்டாலின் இந்த ‘GenZ DMK’ குழுவினரை அழைத்து மது விருந்து கொடுத்ததாக தவெக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த புகைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடதுபுறத்தில் நிற்கும் நபர்களுக்கு இடையில் இடைவெளி இருப்பதையும், அது Edit செய்து உருவாக்கப்பட்டதற்கான முகாந்திரத்தையும் காணமுடிகிறது.
மேலும், இந்த புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடிய போது, ’srihari facts checker’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைக் காணமுடிந்தது.
ஜூலை 4ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் ’GenZ DMK’ குழுவினர் கண்ணியமான உடையில் உதயநிதி ஸ்டாலினுடன் நிற்பதைக் காண்கிறோம். இந்த உண்மையான புகைப்படத்தை Edit செய்து, அவர்கள் Shorts மற்றும் Sleeveless உடையணிந்து, மது பாட்டில்களை கையில் வைத்திருப்பது போன்ற போலியான புகைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காணமுடிகிறது.
முடிவு:
Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படத்தைக் கொண்டு, உதயநிதி ஸ்டாலின் ’GenZ DMK’ குழுவினரை அழைத்து மது விருந்து கொடுத்ததாக தவறாக பரப்பப்படுகிறது.