YouTurn

அதிமுக அதிருப்தி MLA-கள் ஆலோசனை கூட்டத்தில் தற்கொலை செய்து கொள்வது குறித்து பேசினாரா சி.வி.சண்முகம்?

அதிமுக அதிருப்தி MLA-கள் ஆலோசனை கூட்டத்தில் தற்கொலை செய்து கொள்வது குறித்து பேசினாரா சி.வி.சண்முகம்?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘Sun News’ செய்தி ஊடகம் வெளியிட்ட உண்மையான News card-ஐ Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட News card இது.

பரவிய செய்தி

சீக்கிரம் நல்ல முடிவா எடுங்க boys


 

Archive link

விரிவான விளக்கம்

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 54 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் 47 தொகுதிகளில் அதிமுக கட்சி வெற்றி பெற்றிருந்தது. தவெக 108 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பு MLA-கள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக கூறினர். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக MLA-கள் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

 

இந்நிலையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக MLA-களின் கட்சி பதவிகளை பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் அதிமுகவில் சி.வி.சண்முகம் தரப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பு என பிளவு ஏற்படும் நிலை இருந்தது.

 

இந்நிலையில் அதிமுகவின் சி.வி.சண்முகம் தரப்பு MLA-களுக்கு தவெக அமைச்சரவையில் இடம் ஏதும் கொடுக்கப்படவில்லை. ‘தவெக அமைச்சரைைவயில் இடம் கிடைக்காததால், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக அதிருப்தி MLA-கள் அவசர ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது தூக்கு போட்டு சாகலாமா அல்லது விஷ மருந்து குடித்து சாகலாமா என்று சி.வி. சண்முகம் கூறியதாகவும்' Sun News ஊடகத்தில் News card வெளியிடப்பட்டுள்ளதாக திமுக ஆதரவாளர்களால் சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.


 

உண்மை என்ன?

 

பரப்பப்படும் News card-ல் உள்ள வார்த்தைகளை கொண்டு இணையத்தில் தேடினோம். ‘Sun News’ செய்தி ஊடகத்தின் ‘எக்ஸ்’ கடந்த மே 21ஆம் தேதி வெளியாகி இருந்த ஒரு News card-ஐ காண முடிந்தது.


#BREAKING | புறக்கணித்த விஜய்.. அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை#SunNews | #TVKVijay‌ | #TNCabinet | #ADMK pic.twitter.com/foCdYgOsUd

— Sun News (@sunnewstamil) May 21, 2026

 

அதில் ‘தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை' என்றும் ‘தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் கட்சி பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கிய நிலையில் அடுத்தக்கட்ட நிலைப்பாடு குறித்து ஆலோசனை’ என்றும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

அந்த உண்மை News card-ஐ Edit செய்து ‘தூக்கு போட்டு சாகலாமா அல்லது விஷ மருந்து குடித்து சாகலாமா' என்று எஸ்.பி.வேலுமணி பேசியதாக போலியான News card-ஐ உருவாக்கி அதனை சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்கள்.

 

முடிவு:

 

‘Sun News’ செய்தி ஊடகம் வெளியிட்ட உண்மையான News card-ஐ Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட  News card-ஐ திமுகவினர் பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க