யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“தளபதி மு க ஸ்டாலின் எழுச்சிமிகு உரைகள்” என்ற புத்தகத்தை, “தளபதி மு க ஸ்டாலின் பழமொழிகள்” என்று எடிட் செய்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
மு. கருணாநிதி: "ராஜிவ் காந்தி மட்டும் உயிரோடு இருந்திருந்தால், அவரை கொன்றவர்களை மன்னித்திருப்பார்".
மு.க ஸ்டாலின்: "கலைஞர் கருணாநிதி மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் இறந்திருக்க மாட்டார்".
Like Father, Like Son

விரிவான விளக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் பழமொழிகள் என்ற பெயரில் ஒரு புத்தகம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புத்தகத்தில் தொகுப்பு நீலகிரி மா.பாலமுருகன் என்றும், உதவி: இரா.அன்வர்கான் என்றும் குறிப்பிட்டிருந்தது.
எதே ஸ்டாலின் பழமொழிகளா???
சங்கிலி பருப்பு தாலி அறுப்பு , பூனைமேல் மதில்மேல், கொல்முதல்நெல் நெல்முதல்கொள்
போன்ற பழமொழிகள் அடங்கிய தொகுப்பு போல
சரி,
2500 + 1500 = 5000
86 + 9 = 97 போன்ற கணக்கு பாட புத்தகம் எப்ப ரிலீஸ் பண்ணுவீங்க???? pic.twitter.com/uXXVnc98io
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது சத்யா கருப்பையா என்ற எக்ஸ் பக்கத்தில் ஜூலை 30, 2020 அன்று தளபதி மு.க.ஸ்டாலினின் எழுச்சிமிகு உரைகள் என்ற பெயரில் ஒரு புத்தகம் பதிவிடபட்டிருப்பதை காணமுடிந்தது.
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
கொடுமைடே..!!😊😊😊 pic.twitter.com/5gbNB0ujUJ
அந்த புத்தகத்திலும், பரவி வரும் புத்தகத்திலும் தொகுப்பாளர் பெயர் நீலகிரி மா.பாலமுருகன் என்றே குறிப்பிட்டிருந்தது.
இதை வைத்து தேடி பார்த்தோம். அப்போது எழுச்சிமிகு உரைகள் என்பதை, பழமொழிகள் என்று எடிட் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

முடிவு :
நம் தேடலில், “தளபதி மு க ஸ்டாலின் எழுச்சிமிகு உரைகள்” என்ற புத்தகத்தை, “தளபதி மு க ஸ்டாலின் பழமொழிகள்” என்று எடிட் செய்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருவது தெரியவந்தது.