யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
தமிழகத்தில் சிறுபான்மை அடைந்த எடப்பாடி பழனிச்சாமி. நெற்றியில் திருநீறு வைக்கவில்லை என்றால் சிறுபான்மை பாதுகாவலர் ஆகிவிடுவாரா?

X link

X link
விரிவான விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அக்கட்சி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பல இடங்களில் பேசும்போது ’சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் கட்சி அதிமுக’ எனக் குறிப்பிட்டுப் பேசி வருகிறார்.
Archive link
இந்நிலையில் அவர் 2023, அக்டோபர் மாதத்திற்கு முன்னர் நெற்றியில் திருநீறு வைத்து இருந்ததாகவும், 2023 அக்டோபருக்குப் பின் திருநீறு வைப்பதில்லை என்றும் இரண்டு புகைப்படங்கள் ஒப்பிடப்பட்டு ‘நெற்றியில் திருநீறு வைக்கவில்லை என்றால் சிறுபான்மை பாதுகாவலர் ஆகிவிடுவாரா?’ என்று குறிப்பிட்டு பாஜக ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
எடப்பாடி பழனிசாமி குறித்துப் பரவும் படங்கள் பற்றி ஆய்வு செய்ததில், நெற்றியில் திருநீறு இல்லாமல் இருக்கும் படம் 2018ம் ஆண்டே செய்திகளில் வந்துள்ளதைக் காண முடிந்தது.

நெற்றியில் பொட்டு இல்லாமல் பரவக் கூடிய படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமெஜ் சேர்ச் மூலம் தேடியதில், 2022 ஜூன் மாதம் 'தந்தி டிவியில்' வெளியான வீடியோ ஒன்றில் அப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.

அதற்கும் முன்னதாக 2018, பிப்ரவரி மாதம் 'நியூஸ் மினிட்’ தளத்தில் வெளியான செய்தியிலும் அதே படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஈபிஎஸ் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு வீடியோக்களை காண முற்பட்டோம்.

2023, அக்டோபர் 4ம் தேதி செய்தியாளர் சந்திப்பில் அவரது நெற்றியில் திருநீறு உள்ளது. மேலும் அதிமுகவுக்குத் தமிழ்நாடு நேதாஜி சுபாஷ் அணி ஆதரவு தெரிவித்தது தொடர்பாக ‘நியூஸ் ஜெ’ அக்டோபர் 23ம் தேதி வெளியிட்ட செய்தியிலும் ஈபிஎஸ் நெற்றியில் திருநீறு, குங்குமம் உள்ளது.

இவற்றில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்கு முன்னரே நெற்றியில் பொட்டு வைத்தும், வைக்காமலும் இருந்துள்ளார் என்பதை காண முடிகிறது. பழைய படங்களை ஒப்பிட்டு தவறான பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : மத்தியில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரவும் தவறானச் செய்தி !
இதற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பரப்பப்பட்ட போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னினால் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஸ்மிருதி இரானி வடிவில் அம்மாவை கண்டேன்.. எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !
முடிவு :
நம் தேடலில், பாஜகவில் இருந்து அதிமுக விலகிய பிறகு எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற நெற்றியில் பொட்டு வைப்பதில்லை எனப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது பழைய படங்கள், கடந்த அக்டோபர் 23ம் தேதி வெளியான செய்தியிலும் அவர் பொட்டு வைத்துள்ளார் என்பதைக் காண முடிகிறது.
தமிழகத்தில் சிறுபான்மை அடைந்த எடப்பாடி பழனிச்சாமி.
தவறான ஆலோசனை / ஆலோசகர்களால் நடுக்கடல் புயலில் சிக்கிய கப்பலாக தத்தளிக்கிறார் பழனிச்சாமி.
¤ நெற்றியில் திருநீறு வைக்கவில்லை என்றால் சிறுபான்மை பாதுகாவலர் ஆகிவிடுவாரா?
¤ இத்தனை எளிதாக சிறுபான்மையினரை ஏமாற்றி ஓட்டை பெற்றுவிட… pic.twitter.com/pxzutLwfMq
— Truth Alone 🇮🇳 (@TruthAlone2) October 27, 2023