YouTurn

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு !

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்த எண்ணில் இருந்து எனக்கு மிரட்டல் மற்றும் தவறான அழைப்புகள் வருகின்றன +91 94447 ***** தமிழ்நாடு காவல்துறையே உடனடியாக நடவடிக்கை எடுங்கள்!!



Twitter Link

விரிவான விளக்கம்

பொருளாதார நிபுணரும், தமிழ்நாட்டு அரசின் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவருமான ஜெ.ஜெயரஞ்சனின் செல்போனுக்கு யாரோ ஒருவரால் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி அவருடைய ட்விட்டர் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மேலும் அந்தப் பதிவுடன் ஒரு மொபைல் எண் இணைக்கப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.

உண்மை என்ன?

பரவி வரும் பதிவுகள் குறித்து தெரிந்து கொள்ள, அவரது பெயரிலான எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தை ஆய்வு செய்தோம். 'ஜெயரஞ்சன்' என்கிற பெயரில் மூன்று ட்விட்டர் கணக்குகள் இருப்பதை காண முடிந்தது.



மேலும் பரவும் தகவல் குறித்தும், அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் எது என்பது குறித்தும் ஜெயரஞ்சன் அவர்களை யூடர்னில் இருந்து தொடர்பு கொண்டு பேசினோம். "எக்ஸ் பக்கத்தில் பரவக் கூடிய பதிவினை நான் பதிவிடவில்லை. எனக்கு எக்ஸ் பக்கத்தில் கணக்கே இல்லை. அவை அனைத்தும் எனது பெயரில் இயங்கக்கூடிய போலி பக்கங்கள். அவற்றை யாரும் பின்தொடர வேண்டாம்" எனக் கூறினார்.



ஜெயரஞ்சனிடம் பேசியதில் இருந்து அவரது பெயரில் செயல்படக் கூடிய மூன்று எக்ஸ் பக்கங்களும் போலியானவை என்பதை உறுதி செய்ய முடிகிறது. குறிப்பாக சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடரக்கூடிய அப்போலி பக்கத்தை பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : இந்தியாவின் வெற்றியை இஸ்ரேலில் வாழும் நமது சகோதரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என முகமது சிராஜ் கூறியதாகப் பரவும் போலி ட்வீட் !

இப்படி பிரபலங்களின் பெயர்களில் செயல்படும் போலி கணக்குகள் பற்றி இதற்கு முன்னர் யூடர்னில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க