YouTurn

அரசுத் திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தாரா? உண்மை என்ன?

அரசுத் திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தாரா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது அரசுத் திட்டம் கிடையாது. திமுக சார்பில் தொடங்கப்பட்ட ‘அமுதக் கரங்கள்’ என்ற அன்னதான திட்டத்தின் போது எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

துர்கா ஸ்டாலின் என்ன  MLAவா ? இல்ல கவுன்சிலரா ? அரசு திட்டத்தை தொடங்கி வைக்க இவங்க யாரு ???

X link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அரசுத் திட்டத்தைத் தொடங்கி வைத்ததாக வீடியோ ஒன்று அதிமுக-வினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அதில் துர்கா ஸ்டாலின் அன்னதானம் வழங்குகிறார்.

உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோ குறித்து இணையத்தில் தேடியதில், இது தொடர்பாக வெளியான செய்திகளைக் காண முடிந்தது. 

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் மார்ச் மாதம் 1ம் தேதி வர இருக்கிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் ஒரு வருடத்திற்கு அன்னதானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ’அமுதக் கரங்கள்’ எனப் பெயர் வைக்கப்பட்ட அத்திட்டத்தைக் கடந்த 20ம் தேதி துர்கா ஸ்டாலின் கொளத்தூரில் தொடங்கி வைத்தார். 

image.png

இந்த அன்னதானம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வரை 365 நாட்களுக்கு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் உணவு வழங்கப்பட இருப்பதாகவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

image.png

இது தொடர்பான செய்தி எதிலும் அரசுத் திட்டம் என்று கூறப்படவில்லை. திமுக-வின் சார்பில் செய்யப்படும் நலத்திட்டம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து துர்கா ஸ்டாலின் அன்னதானம் வழங்கும் ‘அமுதக் கரங்கள்’ திட்டம் அரசுத் திட்டம் கிடையாது என்பதை உறுதி செய்ய முடிகிறது.

முடிவு: 

அரசுத் திட்டத்தை முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்ததாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. இது அரசுத் திட்டம் கிடையாது. திமுக சார்பில் தொடங்கப்பட்ட ‘அமுதக் கரங்கள்’ என்ற அன்னதான திட்டத்தின் போது எடுக்கப்பட்டது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.