YouTurn

துபாயில் ஜெட் பேக் உதவியுடன் பொருட்கள் டெலிவரி செய்யப்படுவதாகப் பரவும் VFX வீடியோ!

துபாயில் ஜெட் பேக் உதவியுடன் பொருட்கள் டெலிவரி செய்யப்படுவதாகப் பரவும் VFX வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

துபாய்ல கலக்குறானுங்க...

விரிவான விளக்கம்

உணவுகளைக் கடைக்குச் சென்று வாங்குவதைக் காட்டிலும் செல்போனில் ஆர்டர் செய்து, இருக்கும் இடத்திலேயே பெறுவதைத்தான் நகர வாழ்க்கையில் உள்ள பலருக்கு எளிதாக உள்ளது. இத்தகைய டெலிவரி பணியை செய்யப் பல தனியார் நிறுவனங்கள் இயங்குகின்றன.



இந்நிலையில் இந்தியாவைப் பொருத்த அளவில் பைக் அல்லது சைக்கிள் மூலமாக பொருட்கள் டெலிவரி செய்யப்படுகிறது. ஆனால், துபாயில் ட்ரோன் மற்றும் ஜெட் பேக் கொண்டு டெலிவரி செய்யப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவில் ’@spacebook07’ என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாட்டர் மார்க் இருப்பதைக் காண முடிகிறது. அப்பக்கத்தில் இந்த வீடியோ கடந்த ஏப்ரல், 29ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அப்பதிவில் ‘Flying delivery boy in UAE’  என ஆச்சரியத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வீடியோவில் தொடக்கத்தில் ஜெட் பேக் மூலம் பறந்து வந்து கொடுக்கப்படும் மஞ்சள் நிற பையில் noon minutes என்ற பெயர் உள்ளது. அப்பெயரைக் கொண்டு தேடியதில் அது பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் என்பதை அறிய முடிந்தது. 



 










View this post on Instagram























 

A post shared by noon (@noon_uae)






அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விளம்பரம் 2023, நவம்பர் மாதம் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் noon minutes அவர்களது டிக்டாக் பக்கத்தில் இந்த வீடியோ professionals கொண்டு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெட்பேக் மூலம் பரப்பவரின் கைகளில்தான் அதன் control இருக்கும். ஆனால், noon பதிவிட்டுள்ள வீடியோவில் பரப்பவரின் கைகளில் அப்படி எந்த control-லும் இல்லை. அவரது கையில் அந்நிறுவனத்தின் பெயர் அச்சடிக்கப்பட்ட பைதான் உள்ளது.



அடுத்ததாக ஜெட் பேக் மூலம் வீட்டின் முன் தரை இறங்குவதும் கட்டிடத்தின் மேல் சென்று டெலிவரி செய்வது போன்ற வீடியோக்கள் அடங்கிய தொகுப்பு HungerStation’ என்ற எக்ஸ் பக்கத்தில் 2022, செப்டம்பர் 22ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில் அந்த வீடியோக்கள் VFX தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதும் காண்பிக்கப்படுகிறது. 



இவற்றில் இருந்து ஜெட் பேக்கில் டெலிவரி செய்வது போல் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோவை உண்மை எனத் தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

முடிவு: 

துபாயில் ஜெட் பேக் உதவியுடன் பொருட்கள் டெலிவரி செய்யப்படுவதாகப் பரவும் வீடியோ VFX தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விளம்பரம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க