YouTurn

சென்னையில் டிரைவர் இல்லாத டாக்ஸி சேவை என அமெரிக்கா வீடியோவைப் பகிர்ந்த முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு !

சென்னையில் டிரைவர் இல்லாத டாக்ஸி சேவை என அமெரிக்கா வீடியோவைப் பகிர்ந்த முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சென்னையில் டிரைவர் இல்லாத டாக்ஸி சேவை..

X Link |  Archive Link

விரிவான விளக்கம்

சென்னையில் டிரைவர் இல்லாத டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி 4:50 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை முன்னாள் உச்சமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு உட்பட பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

மேலும் ஆள் இல்லாத டாக்ஸியில் தன்னுடைய மகனுடன், வயதான பெண்மணி பயணிப்பது போன்றும், அவர்களுடைய பயணங்களை மொபைலில் அவர்கள் தமிழில் பேசி காட்சிப்படுத்துவது போன்றும் அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.





உண்மை என்ன ?

பரவிவரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.

ASK INFORMATION என்ற யூடியூப் பக்கத்தில் இதன் முழு வீடியோ கடந்த செப்டம்பர் 08 அன்று "அமெரிக்காவில் டிரைவர் இல்லாத டாக்ஸி" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் அந்த டாக்ஸியில் ஓட்டுனர் இருக்கை இடது பக்கமாக அமைந்திருப்பதையும் காண முடிந்தது. ஆனால் இந்தியாவில் ஓட்டுனர் இருக்கை வலது பக்கமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் டிரைவர் இல்லாத டாக்ஸி சேவை இந்தியாவில் எங்கேனும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் தேடி பார்த்தோம். இது குறித்து எந்த ஊடங்களிலும் செய்திகள் வெளியிடப்படவில்லை.



மேலும் பரவி வரும் வீடியோவில் வரும் டாக்ஸியில் "WAYMO" என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், அது குறித்து தேடியதில் கலிபோர்னியாவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிறுவனமான Waymo நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் கிடைத்தது. அதில் இந்த டாக்ஸி சேவை இதுவரை பீனிக்ஸ் (அரிசோனா), சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஆஸ்டின், டெக்சாஸ் போன்ற இடங்களில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



இந்த தகவல்கள் மூலம் சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த வீடியோ அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

மேலும் படிக்க: இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கனடா எதிர்க்கட்சி தலைவர் பேசுவதாகப் பரவும் பழைய வீடியோ !

மேலும் படிக்க: இந்தியாவிற்கான பிரிட்டன் நிதியுதவியை திரும்ப கேட்பதாகப் பரவும் ஊடக வீடியோ.. உண்மை பின்னணி என்ன ?

முடிவு:

நம் தேடலில், சென்னையில் டிரைவர் இல்லாத டாக்ஸி சேவை அறிமுகம் என்று பரவி வரும் வீடியோ அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்பதையும், இந்த சேவை இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க