YouTurn

தமிழ்நாட்டின் சாலை எனத் தவறானப் படத்தை பரப்பும் முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி..!

தமிழ்நாட்டின் சாலை எனத் தவறானப் படத்தை பரப்பும் முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி..!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மழை பெய்தால் ரோட்ல வழுக்கி பாத்திருப்பீங்க. ஆனா ஒரு ரோடே வழுக்கிட்டு போய். பாத்திருக்கீங்களா - K C பழனிசாமி, முன்னாள் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

மழை பெய்தால், ரோட்டில் தான் வழுக்கி விழுவார்கள். ஆனால் இங்கு ஒரு ரோடே அடியோடு பெயர்ந்து போய் விழுந்திருக்கிறது. இது தான் புதிய திராவிட மாடல் ஆட்சியின் ரோடு எனக் குறிப்பிட்டு மழையில் சாலை உடைந்து இருக்கும் புகைப்படத்தினை முன்னாள் அதிமுக பாராளுமன்ற உறுப்பினரான கே.சி.பழனிசாமி உட்பட பலரும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.



Archive Link:



Archive Link

உண்மை என்ன ?

சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்தே பரவி வந்துள்ளதை அறிய முடிந்தது.

மேலும் 2020 மே 13 அன்று பொன்னை நாதன் என்னும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் எந்த பகுதியை சேர்ந்த ரோடு என்று குறிப்பிடாமல் "ரோடு லேசா மழையில் நனைந்து விட்டது அதான் வெயிலில் காயபோட்டுள்ளோம்..." என அப்போதைய அதிமுக அரசை கிண்டல் செய்து பதிவு செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது.



Archive Link

அதே போன்று 2020 மே 23 அன்று Rezwan என்னும் ட்விட்டர் பக்கத்திலும் இதே புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவில், "வங்கதேசத்தில் ஏற்பட்ட அம்பன் சூறாவளி காரணமாக கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் பழுதடைந்துள்ளன. இதற்கு காரணம் சூறாவளி காற்றின் சக்தியா அல்லது மோசமான கட்டுமானமா என்று தெரியவில்லை?" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 



Archive Link:

இதன் உண்மையான புகைப்படம் குறித்தும், இது எந்த பகுதியை சேர்ந்தது என்பது குறித்தும் ஆய்வு செய்து பார்த்ததில், தற்போது வைரலாகும் இந்தப் புகைப்படம், மலேசியாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஃபேஸ்புக் பக்கமான LANDO Zawawi - Brotherhood Malaysia என்னும் பக்கத்தில் 2019 டிசம்பர் 26 அன்றும், Viral Cerita Panas Malaysia என்னும் பக்கத்தில் 2019 டிசம்பர் 27 அன்றும் பதிவு செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.





மேலும் இப்புகைப்படம் தமிழ்நாட்டை சேர்ந்தது என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. 2019-ல் மலேசியாவை சேர்ந்தது என்றும், 2020-ல் வங்கதேசத்தை சேர்ந்தது என்றும் பரவி வந்துள்ளதையும் காண முடிகிறது.

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை எனப் பரப்பப்படும் தவறான படம் !

இதற்கு முன்பும் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை என்று 2020ல் இருந்தே பரவி வந்த புகைப்படம் குறித்து ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.

முடிவு:

நம் தேடலில், திமுக ஆட்சியில் போடப்பட்ட சாலை என சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல. இது 2019ல் இருந்தே மலேசியாவைக் குறிப்பிட்டு  பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க