YouTurn

'ஒரே செல்போனை நான்கு வருடத்திற்கு மேல் பயன்படுத்தினால் ஹார்ட் அட்டாக் வரும்' எனப் பரவும் வதந்தி!

'ஒரே செல்போனை நான்கு வருடத்திற்கு மேல் பயன்படுத்தினால் ஹார்ட் அட்டாக் வரும்' எனப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

நீங்கள் ஒரே மொபைலை நான்கு வருடத்திற்கு மேல் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இதை கண்டிப்பாக நீங்கள் சோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு சோதனை செய்யாமல் விட்டு விட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் (Heart Attack) வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.



Instagram Link

விரிவான விளக்கம்

நீங்கள் ஒரே மொபைலை நான்கு வருடத்திற்கு மேல் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இதை கண்டிப்பாக நீங்கள் சோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு சோதனை செய்யாமல் விட்டு விட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் (Heart Attack) வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதை சோதனை செய்ய *#07# என்ற எண்ணிற்கு உங்கள் மொபைல் போனில் இருந்து டையல் செய்ய வேண்டும். அதில் உங்கள் மொபைல் போனின் SAR மதிப்பு 1.6 W/Kg க்கு குறைவாக இருக்க வேண்டும். ஒருவேளை இந்த மதிப்பு அதிகமாக இருந்தால் உங்கள் மொபைலை தூக்கி போட்டு விடுங்கள். இதனால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் (Heart Attack) வருவதற்கு அதிகமாகவே வாய்ப்பு இருக்கிறது என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



 










View this post on Instagram























 

A post shared by @dailyfacts_99






இதே போன்று, ஒரு மொபைலை ஐந்து வருடத்திற்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டதாகக் கூறி ffreedom app - Money (Tamil) என்ற யூடியூப் பக்கத்திலும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 



உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து அறிந்து கொள்வதற்கு முன்பு, முதலில் SAR மதிப்பு என்றால் என்ன? அதை எவ்வாறு கண்டறிய வேண்டும்? என்பது பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

SAR (Specific Absorption Rate) என்பது மனித உடலால் உறிஞ்சப்படகூடிய (absorbed), Radio Frequency இன் விகிதத்தை கணக்கிடும் ஒரு அளவீடாகும். SAR அளவைப் பொறுத்தவரையில், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட, ICNIRP ஆணையத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களையே இந்தியா தற்போது பின்பற்றி வருகிறது. அதன்படி இந்தியாவில் SAR லிமிட் 1.6 Watts/Kilogram எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது ICNIRP ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 2 Watts/Kilogram என்ற அளவை விட குறைவாகும். 



எனவே இதற்கு மிகையில்லாத அளவு கதிர்வீச்சு வெளியிடும் செல்போன்கள் பாதுகாப்பானவையே. மேலும் ஒவ்வொரு மொபைல் நிறுவனமும், தங்கள் மொபைல் போனில் SAR மதிப்பைக் கட்டாயமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதன்படி மொபைல் போனின் டயல் பேடில் *#07# என்ற எண்ணை டைப் செய்யும் போது, படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று மொபைல்போன் வெளியிடும் கதிர்வீச்சு அளவான SAR பற்றிய விவரங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.



மொபைல் போன்களை நான்கு வருடத்திற்கு மேல் பயன்படுத்தினால் ஹார்ட் அட்டாக் வருமா?

மொபைல் போன்கள் பயன்படுத்தும் போது அவை காதுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், காது மற்றும் காதிற்கு அருகில் உள்ள திசுக்கள் வெப்பமடைவது என்பது உண்மையே. எனவே முடிந்த அளவு சிறிய அழைப்புகளுக்கு மட்டுமே மொபைலை நேரடியாக பயன்படுத்த வேண்டும், நீண்ட அழைப்புகளுக்கு Blutooth மற்றும் Wired Headsets போன்ற சாதனங்களை பயன்படுத்த வேண்டும். மேலும் முடிந்த அளவு குறுஞ்செய்தி அனுப்பும் முறையை அதிகம் பயன்படுத்துவதன் மூலமும், இந்த ஆபத்தை வெகுவாகக் குறைக்கலாம்.

மேலும் மொபைல் போன்கள் பயன்பாட்டிற்கும், இதய நோய்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து பார்த்தோம். Softpedia.com 2009 இல் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து Times of India கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மொபைல் போன்கள் அதிகம் பயன்படுத்துவதால், அது ஹீமோகுளோபின் கசிவை ஏற்படுத்தும். இதனால் ஹீமோகுளோபின் உடலில் குவிந்து, இதய நோய், சிறுநீரக கற்கள் உள்ளிட்ட உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

National Center for Biotechnology Information வெளியிட்டுள்ள அறிக்கையிலும், அதிக செல்போன் பயன்பாடு தலைவலி, தலைச்சுற்றல், தொடையில் உணர்வின்மை, இதய துடிப்பில் மாறுபாடு மற்றும் மார்பில் பாரம் இருப்பது போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கைகள் எதிலுமே, பழைய மொபைல் போன்கள் பயன்படுத்துவதால், மொபைல் போன்களின் கதிர்வீச்சு (SAR மதிப்பு) அதிகரிக்கும் என்றும், அதனால் ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வரும் என்றும் கூறப்படவில்லை.

மொபைல் போன்களை ஐந்து வருடத்திற்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்று அரசு உத்தரவிடப் போகிறதா ?

ஒரு மொபைலை ஐந்து வருடத்திற்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்று அரசு உத்தரவிடப்போவதாக கூறி ffreedom app - Money (Tamil) என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்தும் ஆய்வு செய்து பார்த்தோம். இது குறித்து எந்தவொரு செய்திகளும் அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கங்களில் வெளியிடப்படவில்லை. அரசு மின்னணு கழிவுவுகளை மறுசுழற்சி செய்வது குறித்தே அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. 



எனவே அரசு மொபைல் போனை ஐந்து வருடத்திற்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்று கூறி அறிக்கை வெளியிடப்போவதாகக் கூறி பரவி வரும் செய்திகள் ஆதாரப்பூர்வமற்றவை என்பதை அறிய முடிகிறது. மக்கள் யாரும் இது போன்ற ஆதாரப்பூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம். 
முடிவு:


நம் தேடலில், ஒரே மொபைலை நான்கு வருடத்திற்கு மேல் பயன்படுத்தினால் ஹார்ட் அட்டாக் வரும் என்றும், மொபைல் போனை ஐந்து வருடத்திற்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்று கூறி அரசு அறிக்கை வெளியிடப்போவதாகவும் பரவும் செய்திகள் ஆதாரப்பூர்வமற்றவை என்பதை அறிய முடிகிறது.

 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க