யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பட்டியலின சாதியை சார்ந்தவர்களை மேல்சாதி என்று சொல்லப்படுபவர்கள் தாக்கியதாகக் கூறி பரவி வரும் வீடியோ, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கத்தி, கைத்தடி உள்ளிட்ட ஆயுதங்களால் பொது மக்களை தாக்கிய குற்றவாளிகளை காவல்துறையினர் தாக்கியபோது போது எடுக்கப்பட்டதாகும்.
பரவிய செய்தி
உயர்ந்தவரின் கோவிலுக்குள் நுழைந்ததற்காக அடிப்பவர் ஒரு மனிதநேயவாதி, அடியால் அவதிப்படுபவர் ஒரு கீழ்நிலை அதிகாரி, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் காக்கி உடை அணிந்தவர்கள் ஜனநாயகவாதிகள். இது புதிய இந்தியா. இந்தியாவை ஆட்சி செய்வது பாஜக.
விரிவான விளக்கம்
பட்டியலின சாதியை சார்ந்தவர் கோவிலுக்குள் நுழைந்ததால் மேல்சாதி என்று சொல்லப்படுபவர்கள் போலீசார் முன்னிலையிலேயே தாக்குவதைப் பாருங்கள் என்று கூறி ஒரு நிமிட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், காவலர்களுக்கு மத்தியில் இளைஞர் ஒருவர் தடியால் தாக்கப்படுவதையும் தெளிவாகக் காண முடிகிறது.
உயர்ந்தவரின் கோவிலுக்குள் நுழைந்ததற்காக அடிப்பவர் ஒரு மனிதநேயவாதி, அடியால் அவதிப்படுபவர் ஒரு கீழ்நிலை அதிகாரி, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் காக்கி உடை அணிந்தவர்கள் ஜனநாயகவாதிகள். இது புதிய இந்தியா...
இந்தியாவை ஆட்சி செய்வது பாஜக 😡😡😡😡
Shared pic.twitter.com/qunTMHcDxQ
உயர்ந்தவரின் கோவிலுக்குள் நுழைந்ததற்காக அடிப்பவர் ஒரு மனிதநேயவாதி, அடியால் அவதிப்படுபவர் ஒரு கீழ்நிலை அதிகாரி,
அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் காக்கி உடை அணிந்தவர்கள் ஜனநாயகவாதிகள்.
இது புதிய இந்தியா...
இந்தியாவை ஆட்சி செய்வது பாஜக 😡😡😡😡 pic.twitter.com/3zfR6rIUfn
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது குஜராத்தில் நடந்த சம்பவம் என்பதை அறிய முடிந்தது.
“Mint“ ஊடகத்தின் இணையப்பக்கத்தில், பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு கடந்த மார்ச் 15 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வஸ்த்ரால் பகுதியில் கத்தி, கைத்தடி உள்ளிட்ட ஆயுதங்களால் பொது மக்கள் மற்றும் சாலையில் சென்ற வாகனங்களை தாக்கிய குற்றவாளிகளை குஜராத் போலீசார் தாக்கியபோது போது எடுக்கப்பட்ட வீடியோ இது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அதில், ஹோலி கொண்டாட்டங்களுக்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 13 அன்று, 20 பேர் கொண்ட கும்பல் வாள்கள் மற்றும் கைத்தடியைப் பயன்படுத்தி தாக்கினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இதுவரை குறைந்தது 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று, “News18 Gujarati“ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குற்றவாளிகளை காவலர்கள் தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் பலரும், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு, கோவிலுக்குள் நுழைந்ததால் பட்டியலின சாதியை சார்ந்தவர்களை மேல்சாதி என்று சொல்லப்படுபவர்கள் போலீசார் முன்னிலையிலேயே தாக்குவதைப் பாருங்கள் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், பட்டியலின சாதியை சார்ந்தவர்களை மேல்சாதி என்று சொல்லப்படுபவர்கள் தாக்கியதாகக் கூறி பரவி வரும் வீடியோ, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கத்தி, கைத்தடி உள்ளிட்ட ஆயுதங்களால் பொது மக்களை தாக்கிய குற்றவாளிகளை காவல்துறையினர் தாக்கியபோது போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.