YouTurn

குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்குகிறதா ஒன்றிய அரசு? உண்மை என்ன?

குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்குகிறதா ஒன்றிய அரசு? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

குழந்தைகளுக்கு மிஷன் வத்சல்யா (Mission Vatsalya) திட்டத்தின் மூலம் மாதம் ரூ.4000 வழங்கப்படுவதாகக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை. பெற்றோரை இழந்த அல்லது பெற்றோரால் வளர்க்க முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

பரவிய செய்தி

குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி. மத்திய அரசின் 'மிஷன் வத்சல்யா' குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.


விரிவான விளக்கம்

ஒன்றிய அரசின் 'மிஷன் வத்சல்யா' குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது என்று கூறி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில், முக்கியமாக வாட்சாப் தளத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. 


மேலும் பரவி வரும் பதிவுகளில், இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆய்வு செய்தோம். அதன்படி, 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு, பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக மூன்று திட்டங்களை செயல்படுத்தியது. பின்னர் 2017 ஆம் ஆண்டில், இது "குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம்" என்றும், 2021-22 ஆம் ஆண்டில் இது ‘மிஷன் வாத்சல்யா’ என்றும் பெயர் மாற்றப்பட்டது என்பதை அறிய முடிந்தது. 



ஒன்றிய அரசின் “மிஷன் வத்சல்யா (Mission Vatsalya)” நிதி ஆதரவுத் திட்டத்தின்கீழ், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் அல்லது Single Mother ஆக பொருளாதார ரீதியாக குழந்தைகளை வளர்க்க முடியாத நிலையில் இருப்பவரின் குழந்தைகள், எச்.ஐ.வி, எய்ட்ஸ் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள், குழந்தைகள் இல்லங்கள், சிறப்பு இல்லங்களின் கண்காணிப்பாளரால் பரிந்துரை செய்யப்படும் குழந்தைகள், கணவரை இழந்த விவாகரத்தான பெற்றோரால் கைவிடப்பட்டு பாதுகாவலர் பராமரிப்பிலுள்ள குழந்தைகள், விபத்தினால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு பொருளாதார வசதியின்றி குழந்தைகளை பராமரிக்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் போன்றோருக்கு அவர்களின் தகுதியினை உறுதி செய்து அதனடிப்படையில் மட்டுமே நிதியுதவி வழங்கப்படுகிறது என்பதை செய்திகளின் மூலம் அறிய முடிகிறது. அதன்படி தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மாதம் ரூ.4000- வீதம் வழங்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் அனைத்து குழந்தைகளுக்கும் (ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகள் வரை) இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.4000 வழங்கப்படுவதாகக் கூறி தவறாத் தகவலைத் திரித்துப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகள் வரை மிஷன் வத்சல்யா (Mission Vatsalya) திட்டத்தின் மூலம் மாதம் ரூ.4000 வழங்கப்படுவதாகக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. பெற்றோரை இழந்த அல்லது பெற்றோரால் வளர்க்க முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க