YouTurn

உதய சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னாரா விஜய்? திமுகவினர் பரப்பும் போலி வீடியோ!

உதய சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னாரா விஜய்? திமுகவினர் பரப்பும் போலி வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

’விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு விஜய் பேசியதை Edit செய்து ‘உதய சூரியன்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சொன்னதாக போலியான வீடியோவை பரப்புகிறார்கள்.

பரவிய செய்தி

திமுகவை ஜெயிக்க வைக்கத்தான் விஜய் போட்டியே போடுகிறார் என்று சொன்னால் மொத்த குரங்கு கூட்டமும் கடிக்க வரும்.  

நீங்கள் பாத்துக்கங்க. 



image.png


Link / Archive Link 



Link / Archive Link 

விரிவான விளக்கம்

வருகின்றன ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மார்ச் 30ஆம் தேதி சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், அதனைத் தொடர்ந்து சென்னை பெரம்பூரிலும் கொளத்தூரிலும் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.



அப்போது “உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு வாக்குச் சாவடிக்கு சென்று, ’உதய சூரியன்’ சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள்” என்று விஜய் பேசியதாக ஒரு சிறு வீடியோ சமூக வலைத்தளத்தில் திமுக ஆதரவாளர்களாலும், சவுக்கு சங்கர் போன்றவர்களாலும் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?


தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய வீடியோவை தேடிய போது, ’தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.



அதில், ’உங்களுக்கும் Gen Z தலைமுறையினருக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். ஏப்ரல் 23ஆம் தேதி உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை கையில் எடுத்துக்கொண்டு முதல் ஆளா பூத்ல நின்னு ’விசில்’ சின்னத்திற்கு வாக்குச் செலுத்துங்கள்’ என்றுதான் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த உண்மையான காணொளியை Edit செய்து, உதய சூரியனுக்கு ஓட்டு போடச் சொன்னதாக போலியாக உருவாக்கப்பட்ட காணொளியை தான் திமுக ஆதரவாளர்கள் சமூக தலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். 


முடிவு:


விஜய் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டதை Edit செய்து திமுகவின் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சொன்னதாக போலியாக உருவாக்கப்பட்ட காணொளியை திமுக ஆதரவாளர்கள் பரப்பி வருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க