YouTurn

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வைஷ்ணவி காதலித்து வருவதாக பரப்பப்படும் போலியான புகைப்படம்!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வைஷ்ணவி காதலித்து வருவதாக பரப்பப்படும் போலியான புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திமுக நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படம் இது.

பரவிய செய்தி

காதலுக்கு வயதில்லை 

வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்!!!


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

ஒரு பொது நிகழ்ச்சியின் போது மேடையில், திமுகவின் மேடைப் பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தியும், தவெகவிலிருந்து திமுகவில் புதிதாக இணைந்த வைஷ்ணவியும் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக’ விஜய் ரசிகரால் பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன?


பரப்பப்படும் புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடியபோது, திமுக தொண்டர் வைஷ்ணவியின் ‘எக்ஸ்’ பக்கத்தில் இந்த புகைப்படத்தைக் காணமுடிந்தது.



அதில், ’பிப்ரவரி 17ஆம் தேதி திமுகவின் கோவை வடக்கு மாவட்டக் கழகம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிக் கழகம் சார்பாக  ’தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில் கலந்து கொண்ட திமுக மூத்த நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாகவும்’ வைஷ்ணவி குறிப்பிட்டுள்ளார்.



அதில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் காணமுடிகிறது. இதில் அவர்கள் மாலை அணிந்திருக்கவில்லை என்பதைக் காணமுடிகிறது.


இதிலிருந்து, திமுக நிகழ்ச்சியின் போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தியுடன் வைஷ்ணவி எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை Edit செய்து போலியான புகைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.


முடிவு:


திமுக நிகழ்ச்சியின் போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தியுடன் வைஷ்ணவி எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை போலியாக Edit செய்து அதனை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க