YouTurn

தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின் என ராஜீவ் காந்தி கூறியதாக சவுக்கு சங்கர் பகிர்ந்த எடிட் செய்த படம்!

தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின் என ராஜீவ் காந்தி கூறியதாக சவுக்கு சங்கர் பகிர்ந்த எடிட் செய்த படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின்! - வெளுத்து வாங்கும் இராஜீவ் காந்தி



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

சமீபத்தில் "இந்தியாவின் பேரிடர் மோடி, தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின்" என திமுகவின் மாணவரணி தலைவரான இராஜீவ்காந்தி கூறியதாகக் கூறி ஜூனியர் விகடனின் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் இதனை சவுக்கு சங்கர், U2brutus பெயரில் இயங்கும் போலி பக்கம் உட்பட பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பி வருவதையும் காண முடிகிறது.

https://twitter.com/U2BrutusOffl/status/1739943843381035428

https://twitter.com/PradiTalks/status/1739952359558808031

உண்மை என்ன?

பரவி வரும் கார்டு குறித்து இராஜீவ் காந்தியின் சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த டிசம்பர் 27 அன்று "தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்!!" என்று குறிப்பிட்டு ராஜீவ்காந்தி ஜூனியர் விகடனின் கார்டு ஒன்றை பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது.  அதில், “இந்தியாவின் பேரிடர் மோடி... தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்!' - வெளுத்து வாங்கும் இராஜீவ் காந்தி" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

https://twitter.com/rajiv_dmk/status/1739859831325114748

எனவே இதன் உண்மைத் தன்மையை அறிய, ஜூனியர் விகடன் இது குறித்து வெளியிட்டுள்ள கட்டுரையை ஆய்வு செய்து பார்த்தோம். அதிலும் "இந்தியாவின் பேரிடர் மோடி... தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்!" என்று குறிப்பிட்டே ராஜீவ்காந்தி அளித்துள்ள பேட்டி குறித்து கட்டுரை ஒன்றை வெளியிடப்பட்டிருந்தது.



மேலும் அதில், "டிசம்பர் 12-லேயே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துவிட்டது’ என்கிறாரே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்? என்ற நிரூபரின் கேள்விக்கு, "பொய் சொல்கிறார். சரி, அப்படியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டதென்றால், மத்திய ரயில்வேதுறையால் திருச்செந்தூருக்கு இயக்கப்பட்ட ரயிலை அவர்கள் ஏன் முன்பே ரத்து செய்யவில்லை. முன்பே தெரியுமென்றால், ‘தேசியப் பேரிடர் மீட்புக்குழுவை அனுப்பினோம்’ என வாய்கிழியப் பேசும் நிர்மலா சீதாராமன், ஏன் மழைக்கு முன்பே அனுப்பவில்லை. இந்தியாவைப் பிடித்த பேரிடர் மோடி என்றால், தமிழ்நாட்டைப் பிடித்த பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்." என்று ராஜீவ்காந்தி அதில் பதிலளித்துள்ளதையும் காண முடிந்தது.

எனவே "இந்தியாவின் பேரிடர் மோடி, தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்" என உள்ள ஜூனியன் விகடன் கார்டை சிலர் "மு.க.ஸ்டாலின்" பெயரை எடிட் செய்து தவறாக பரப்பியுள்ளனர் என்பதை உறுதிபடுத்த முடிகிறது.



மேலும் படிக்க: கர்னல் தியாகராஜனை திமுக ராஜீவ் காந்தி தேச துரோகி எனக் கூறியதாகப் பொய் குற்றச்சாட்டு

இதற்கு முன்பும் திமுகவின் ராஜீவ்காந்தி குறித்து பல செய்திகள் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: முன்னாள் சபாநாயகர் தனபாலை இருக்கையில் அமர வைக்காத பழனிச்சாமி எனப் பரப்பப்படும் பொய் !

முடிவு:

நம் தேடலில், தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின்" என திமுகவைச் சேர்ந்த இராஜீவ் காந்தி கூறியதாக பரவி வரும் ஜூனியர் விகடனின் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க